Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௪௭

Qur'an Surah Al-Isra Verse 47

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖٓ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا (الإسراء : ١٧)

naḥnu
نَّحْنُ
We
நாம்
aʿlamu
أَعْلَمُ
know best
மிக அறிந்தவர்கள்
bimā yastamiʿūna bihi
بِمَا يَسْتَمِعُونَ بِهِۦٓ
[of] what they listen to [it]
எதற்காக/செவிமடுக்கின்றனர்/அதை
idh yastamiʿūna
إِذْ يَسْتَمِعُونَ
when they listen
அவர்கள் செவிமடுக்கும் போது
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
wa-idh
وَإِذْ
and when
இன்னும் /போது
hum
هُمْ
they
அவர்கள்
najwā
نَجْوَىٰٓ
(are) in private conversation
தனித்து பேசுபவர்கள்
idh yaqūlu
إِذْ يَقُولُ
when say
கூறும் போது
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
the wrongdoers
அநியாயக்காரர்கள்
in tattabiʿūna
إِن تَتَّبِعُونَ
"Not you follow
நீங்கள் பின்பற்றவில்லை
illā rajulan
إِلَّا رَجُلًا
but a man
ஓர் ஆடவரை/தவிர
masḥūran
مَّسْحُورًا
bewitched"
(மனித இனத்தை சேர்ந்தவர்,) உண்ணவும் குடிக்கவும் செய்பவர்

Transliteration:

nahnu a'lamu bimaa yastami'oona biheee iz yastami'oona ilaika wa iz hum najwaaa iz yaqooluz zaalimoona in tattabi'oona illaa rajulam mas hooraa (QS. al-ʾIsrāʾ:47)

English Sahih International:

We are most knowing of how they listen to it when they listen to you and [of] when they are in private conversation, when the wrongdoers say, "You follow not but a man affected by magic." (QS. Al-Isra, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் உங்களுக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உங்களைப் பற்றி) இரகசியமாகப் பேசிக் கொண்டால், "சூனியத்திற்குள்ளான மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை" என்று (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்). (பனீ இஸ்ராயீல், வசனம் ௪௭)

Jan Trust Foundation

(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உமக்கு செவிமடுக்கும்போது எதற்காக செவிமடுக்கின்றனர் என்பதையும் இன்னும் அவர்கள் தனித்து பேசுபவர்களாக இருக்கும் போது(ம்), “உண்ணவும் குடிக்கவும் செய்யும் (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவரைத் தவிர (உயர்ந்த ஒரு வானவரை) நீங்கள் பின்பற்றவில்லை”என்று அநியாயக்காரர்கள் கூறும் போது(ம் அவர்கள் கூறுவதை) நாம் மிக அறிந்தவர்கள்.