Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௪௬

Qur'an Surah Al-Isra Verse 46

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًاۗ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا (الإسراء : ١٧)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We have placed
ஆக்கிவிடுவோம்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
over their hearts
அவர்களின் உள்ளங்கள் மீது
akinnatan
أَكِنَّةً
coverings
மூடிகளை
an yafqahūhu
أَن يَفْقَهُوهُ
lest they understand it
அவர்கள் விளங்குவதற்கு/அதை
wafī ādhānihim waqran
وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًاۚ
and in their ears deafness
இன்னும் காதுகளில்/அவர்களுடைய/கனத்தை
wa-idhā dhakarta
وَإِذَا ذَكَرْتَ
And when you mention
நீர் நினைவுகூர்ந்தால்
rabbaka
رَبَّكَ
your Lord
உம் இறைவனை
fī l-qur'āni
فِى ٱلْقُرْءَانِ
in the Quran
குர்ஆனில்
waḥdahu
وَحْدَهُۥ
Alone
அவனை மட்டும்
wallaw
وَلَّوْا۟
they turn
திரும்புகின்றனர்
ʿalā
عَلَىٰٓ
on
மீது
adbārihim
أَدْبَٰرِهِمْ
their backs
தங்கள் பின்புறங்கள்
nufūran
نُفُورًا
(in) aversion
வெறுத்து

Transliteration:

Wa ja'alnaa 'alaa quloo bihim akinnatan any yafqahoohu wa feee aazaanihim waqraa; wa izaa zakarta Rabbaka fil Quraani wahdahoo wallaw 'alaaa adbaarihim nufooraa (QS. al-ʾIsrāʾ:46)

English Sahih International:

And We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And when you mention your Lord alone in the Quran, they turn back in aversion. (QS. Al-Isra, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதனை விளங்கிக்கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திருக்குர்ஆனில் உங்கள் இறைவன் ஒருவனைப் பற்றியே நீங்கள் கூறிக்கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர். (பனீ இஸ்ராயீல், வசனம் ௪௬)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய உள்ளங்கள் மீது அதை அவர்கள் விளங்குவதற்கு (தடையாக) மூடிகளையும் அவர்களுடைய காதுகளில் கனத்தையும் (செவிட்டு தனத்தையும்) ஆக்கிவிடுவோம். குர்ஆனில் உம் இறைவன் ஒருவனை மட்டும் நீர் நினைவு கூர்ந்தால், அவர்கள் (அதை) வெறுத்து தங்கள் பின்புறங்கள் மீது திரும்புகின்றனர் (வெருண்டு ஓடி விடுகின்றனர்).