குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௪௪
Qur'an Surah Al-Isra Verse 44
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّۗ وَاِنْ مِّنْ شَيْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْۗ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا (الإسراء : ١٧)
- tusabbiḥu
- تُسَبِّحُ
- Glorify
- துதிக்கின்றன(ர்)
- lahu
- لَهُ
- [to] Him
- அவனையே
- l-samāwātu
- ٱلسَّمَٰوَٰتُ
- the seven heavens
- வானங்கள்
- l-sabʿu
- ٱلسَّبْعُ
- the seven heavens
- ஏழு
- wal-arḍu
- وَٱلْأَرْضُ
- and the earth
- இன்னும் பூமி
- waman
- وَمَن
- and whatever
- இன்னும் எவர்
- fīhinna
- فِيهِنَّۚ
- (is) in them
- இவற்றில்
- wa-in
- وَإِن
- And (there is) not
- இல்லை
- min shayin
- مِّن شَىْءٍ
- any thing
- எந்த ஒரு பொருளும்
- illā
- إِلَّا
- except
- தவிர
- yusabbiḥu
- يُسَبِّحُ
- glorifies
- துதிக்கிறது
- biḥamdihi
- بِحَمْدِهِۦ
- His Praise
- அவனைப் புகழ்ந்து
- walākin
- وَلَٰكِن
- but
- எனினும்
- lā tafqahūna
- لَّا تَفْقَهُونَ
- not you understand
- அறிய மாட்டீர்கள்
- tasbīḥahum
- تَسْبِيحَهُمْۗ
- their glorification
- அவர்களின் துதியை
- innahu
- إِنَّهُۥ
- Indeed, He
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- is
- இருக்கிறான்
- ḥalīman
- حَلِيمًا
- Ever-Forbearing
- மகா சகிப்பாளனாக
- ghafūran
- غَفُورًا
- Oft-Forgiving"
- மகா மன்னிப்பாளனாக
Transliteration:
Tusabbihu lahus samaawaatus sab'u wal ardu wa man feehinn; wa im min shai'in illaa yusabbihu bihamdihee wa laakil laa tafqahoona tasbeehahum; innahoo kaana Haleeman Ghafooraa(QS. al-ʾIsrāʾ:44)
English Sahih International:
The seven heavens and the earth and whatever is in them exalt Him. And there is not a thing except that it exalts [Allah] by His praise, but you do not understand their [way of] exalting. Indeed, He is ever Forbearing and Forgiving. (QS. Al-Isra, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௪௪)
Jan Trust Foundation
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கின்றனர். அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், அவர்களின் துதியை (மனிதர்களே) நீங்கள் அறிய மாட்டீர்கள். நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.