குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௪௧
Qur'an Surah Al-Isra Verse 41
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ صَرَّفْنَا فِيْ هٰذَا الْقُرْاٰنِ لِيَذَّكَّرُوْاۗ وَمَا يَزِيْدُهُمْ اِلَّا نُفُوْرًا (الإسراء : ١٧)
- walaqad ṣarrafnā
- وَلَقَدْ صَرَّفْنَا
- And verily We have explained
- திட்டமாக விவரித்தோம்
- fī hādhā l-qur'āni
- فِى هَٰذَا ٱلْقُرْءَانِ
- in this the Quran
- இந்த குர்ஆனில்
- liyadhakkarū
- لِيَذَّكَّرُوا۟
- that they may take heed
- அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
- wamā yazīduhum
- وَمَا يَزِيدُهُمْ
- but not it increases them
- அதிகப்படுத்தவில்லை/அவர்களுக்கு
- illā
- إِلَّا
- except
- தவிர
- nufūran
- نُفُورًا
- (in) aversion
- வெறுப்பை
Transliteration:
Wa laqad sarrafnaa fee haazal Quraani liyazzakkaroo wa maa yazeeduhum illaa nufooraa(QS. al-ʾIsrāʾ:41)
English Sahih International:
And We have certainly diversified [the contents] in this Quran that they [i.e., mankind] may be reminded, but it does not increase them [i.e., the disbelievers] except in aversion. (QS. Al-Isra, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையேயன்றி அதிகப்படுத்தவில்லை. (பனீ இஸ்ராயீல், வசனம் ௪௧)
Jan Trust Foundation
இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (மக்கள்) நல்லுபதேசம் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டவட்டமாக (பல நல்லுபதேசங்களை) விவரித்தோம். (ஆனால்) அது அவர்களுக்கு வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.