Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩௯

Qur'an Surah Al-Isra Verse 39

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ مِمَّآ اَوْحٰٓى اِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِۗ وَلَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتُلْقٰى فِيْ جَهَنَّمَ مَلُوْمًا مَّدْحُوْرًا (الإسراء : ١٧)

dhālika
ذَٰلِكَ
That
இவை
mimmā
مِمَّآ
(is) from what
எதிலிருந்து
awḥā
أَوْحَىٰٓ
(was) revealed
வஹீ அறிவித்தான்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
rabbuka
رَبُّكَ
(from) your Lord
உம் இறைவன்
mina
مِنَ
of
இருந்து
l-ḥik'mati
ٱلْحِكْمَةِۗ
the wisdom
ஞானம்
walā tajʿal
وَلَا تَجْعَلْ
And (do) not make
இன்னும் ஆக்காதீர்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
with Allah
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
god
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَ
other
வேறு
fatul'qā
فَتُلْقَىٰ
lest you should be thrown
எறியப்படுவீர்
fī jahannama
فِى جَهَنَّمَ
in Hell
நரகில்
malūman
مَلُومًا
blameworthy
இகழப்பட்டவராக
madḥūran
مَّدْحُورًا
abandoned
தூரமாக்கப்பட்டவராக

Transliteration:

Zaalika mimmaaa awhaaa ilaika Rabbuka minal hikmah; wa laa taj'al ma'allaahi ilaahan aakhara fatulqaa fee Jahannama maloomam mad hooraa (QS. al-ʾIsrāʾ:39)

English Sahih International:

That is from what your Lord has revealed to you, [O Muhammad], of wisdom. And, [O mankind], do not make [as equal] with Allah another deity, lest you be thrown into Hell, blamed and banished. (QS. Al-Isra, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவை உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட ஞான(உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்ட வராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௩௯)

Jan Trust Foundation

இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) இவை, உமக்கு உம் இறைவன் வஹ்யி அறிவித்த ஞானத்திலிருந்து உள்ளவை. அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) இகழப்பட்டவராக, (இறை அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக நரகில் எறியப்படுவீர்.