Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩௭

Qur'an Surah Al-Isra Verse 37

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًاۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا (الإسراء : ١٧)

walā tamshi
وَلَا تَمْشِ
And (do) not walk
இன்னும் நடக்காதே
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
maraḥan
مَرَحًاۖ
(with) insolence
கர்வம் கொண்டவனாக
innaka
إِنَّكَ
Indeed you
நிச்சயமாக நீ
lan takhriqa
لَن تَخْرِقَ
will never tear
அறவே நீ கிழிக்க(வும்) முடியாது
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
பூமியை
walan tablugha
وَلَن تَبْلُغَ
and will never reach
இன்னும் அறவே நீ அடைய(வும்) முடியாது
l-jibāla
ٱلْجِبَالَ
the mountains
மலைகளின்
ṭūlan
طُولًا
(in) height
உயரத்தை

Transliteration:

Wa laa tamshi fil ardi marahan innaka lan takhriqal arda wa lan tablughal jibaala toola (QS. al-ʾIsrāʾ:37)

English Sahih International:

And do not walk upon the earth exultantly. Indeed, you will never tear the earth [apart], and you will never reach the mountains in height. (QS. Al-Isra, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது. (பனீ இஸ்ராயீல், வசனம் ௩௭)

Jan Trust Foundation

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமியில் கர்வம் கொண்டவனாக நடக்காதே. நிச்சயமாக நீ அறவே பூமியை கிழிக்கவும் முடியாது; இன்னும் நீ மலைகளின் உயரத்தை அடையவும் முடியாது.