குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩௫
Qur'an Surah Al-Isra Verse 35
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَوْفُوا الْكَيْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِۗ ذٰلِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَأْوِيْلًا (الإسراء : ١٧)
- wa-awfū
- وَأَوْفُوا۟
- And give full
- இன்னும் முழுமையாக்குங்கள்
- l-kayla
- ٱلْكَيْلَ
- [the] measure
- அளவையை
- idhā kil'tum
- إِذَا كِلْتُمْ
- when you measure
- நீங்கள் அளந்தால்
- wazinū
- وَزِنُوا۟
- and weigh
- இன்னும் நிறுங்கள்
- bil-qis'ṭāsi
- بِٱلْقِسْطَاسِ
- with the balance
- தராசைக் கொண்டு
- l-mus'taqīmi
- ٱلْمُسْتَقِيمِۚ
- the straight
- சரியானது
- dhālika
- ذَٰلِكَ
- That
- அது
- khayrun
- خَيْرٌ
- (is) good
- மிகச் சிறந்தது
- wa-aḥsanu
- وَأَحْسَنُ
- and best
- மிக அழகியது
- tawīlan
- تَأْوِيلًا
- (in) result
- முடிவால்
Transliteration:
Wa awful kaila izaa kiltum wa zinoo bilqistaasil mustaqeem; zaalika khairunw wa ahsanu taaweelaa(QS. al-ʾIsrāʾ:35)
English Sahih International:
And give full measure when you measure, and weigh with an even [i.e., honest] balance. That is the best [way] and best in result. (QS. Al-Isra, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும். (பனீ இஸ்ராயீல், வசனம் ௩௫)
Jan Trust Foundation
மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் அளந்தால் (அந்த) அளவையை முழுமையாக்குங்கள்; சரியான (நீதமான) தராசைக் கொண்டு (பொருள்களை) நிறுங்கள். அது மிகச் சிறந்தது; முடிவால் மிக அழகியது.