குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௩௦
Qur'an Surah Al-Isra Verse 30
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۗاِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًاۢ بَصِيْرًا ࣖ (الإسراء : ١٧)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உம் இறைவன்
- yabsuṭu
- يَبْسُطُ
- extends
- விரிவாக்குகின்றான்
- l-riz'qa
- ٱلرِّزْقَ
- the provision
- வாழ்வாதாரத்தை
- liman yashāu
- لِمَن يَشَآءُ
- for whom He wills
- தான் நாடியவர்களுக்கு
- wayaqdiru
- وَيَقْدِرُۚ
- and straitens
- இன்னும் அளவாகக் கொடுக்கின்றான்
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றான்
- biʿibādihi
- بِعِبَادِهِۦ
- of His slaves
- தன் அடியார்களை
- khabīran
- خَبِيرًۢا
- All-Aware
- ஆழ்ந்தறிபவனாக
- baṣīran
- بَصِيرًا
- All-Seer
- உற்று நோக்குபவனாக
Transliteration:
Inna Rabbaka yabsuturrizqa limai yashaaa'u wa yaqdir; innahoo kaana bi'ibaadihee Khabeeram Baseera(QS. al-ʾIsrāʾ:30)
English Sahih International:
Indeed, your Lord extends provision for whom He wills and restricts [it]. Indeed He is ever, concerning His servants, Aware and Seeing. (QS. Al-Isra, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக உங்கள் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்தும்) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், செயலை உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்கும் தக்கவாறு கொடுக்கிறான்.) (பனீ இஸ்ராயீல், வசனம் ௩௦)
Jan Trust Foundation
நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுகிறவருக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகின்றான்; (தான் நாடுகிறவருக்கு) அளவாக (சுருக்கி)க் கொடுக்கின்றான். நிச்சயமாக அவன், தன் அடியார்களை ஆழ்ந்தறிபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.