Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨௯

Qur'an Surah Al-Isra Verse 29

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا (الإسراء : ١٧)

walā tajʿal
وَلَا تَجْعَلْ
And (do) not make
ஆக்காதே
yadaka
يَدَكَ
your hand
உனது கையை
maghlūlatan
مَغْلُولَةً
chained
விலங்கிடப்பட்டதாக
ilā ʿunuqika
إِلَىٰ عُنُقِكَ
to your neck
உன் கழுத்தில்
walā tabsuṭ'hā
وَلَا تَبْسُطْهَا
and not extend it
இன்னும் விரிக்காதே/அதை
kulla l-basṭi
كُلَّ ٱلْبَسْطِ
(to its) utmost reach
முற்றிலும் விரித்ததாக
fataqʿuda
فَتَقْعُدَ
so that you sit
அதனால் தங்கிவிடுவாய்
malūman
مَلُومًا
blameworthy
பழிக்கப்பட்டவராக
maḥsūran
مَّحْسُورًا
insolvent
முடக்கப்பட்டவராக

Transliteration:

Wa laa taj'al yadaka maghloolatan il 'unuqika wa laa tabsut haa kullal basti fataq'uda maloomam mahsooraa (QS. al-ʾIsrāʾ:29)

English Sahih International:

And do not make your hand [as] chained to your neck or extend it completely and [thereby] become blamed and insolvent. (QS. Al-Isra, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! அன்றி, (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்கள்! அதனால் நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௨௯)

Jan Trust Foundation

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உனது கையை உன் கழுத்தில் விலங்கிடப்பட்டதாக ஆக்காதே! அதை முற்றிலும் விரிக்காதே! அதனால் நீ பழிக்கப்பட்டவராக முடக்கப்பட்டவராக (குறைபட்டவராக, ஏதுமற்றவராக) தங்கிவிடுவாய்.