குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨௬
Qur'an Surah Al-Isra Verse 26
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا (الإسراء : ١٧)
- waāti
 - وَءَاتِ
 - And give
 - இன்னும் கொடு!
 
- dhā l-qur'bā
 - ذَا ٱلْقُرْبَىٰ
 - the relatives the relatives
 - உறவினருக்கு
 
- ḥaqqahu
 - حَقَّهُۥ
 - his right
 - அவருடைய உரிமையை
 
- wal-mis'kīna
 - وَٱلْمِسْكِينَ
 - and the needy
 - இன்னும் ஏழைக்கு
 
- wa-ib'na l-sabīli
 - وَٱبْنَ ٱلسَّبِيلِ
 - and the wayfarer and the wayfarer
 - இன்னும் வழிப்போக்கருக்கு
 
- walā tubadhir
 - وَلَا تُبَذِّرْ
 - and (do) not spend
 - இன்னும் மிதமிஞ்சி செலவழிக்காதே!
 
- tabdhīran
 - تَبْذِيرًا
 - wastefully
 - மித மிஞ்சி, மிக வீணாக செலவழித்தல்
 
Transliteration:
Wa aati zal qurbaa haqqahoo walmiskeena wabnas sabeeli wa laa tubazzir tabzeeraa(QS. al-ʾIsrāʾ:26)
English Sahih International:
And give the relative his right, and [also] the poor and the traveler, and do not spend wastefully. (QS. Al-Isra, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர் களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௨௬)
Jan Trust Foundation
இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உறவினருக்கு அவருடைய உரிமையைக் கொடு! ஏழைக்கும் வழிப்போக்கருக்கும் (அவ்வாறே) கொடு! மிதமிஞ்சி (வீணாக) செலவழிக்காதே!