Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨௫

Qur'an Surah Al-Isra Verse 25

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِيْ نُفُوْسِكُمْ ۗاِنْ تَكُوْنُوْا صٰلِحِيْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِيْنَ غَفُوْرًا (الإسراء : ١٧)

rabbukum
رَّبُّكُمْ
Your Lord
உங்கள் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing
மிக அறிந்தவன்
bimā
بِمَا
of what
எதை
fī nufūsikum
فِى نُفُوسِكُمْۚ
(is) in yourselves
உங்கள் மனங்களில்
in takūnū
إِن تَكُونُوا۟
If you are
நீங்கள் இருந்தால்
ṣāliḥīna
صَٰلِحِينَ
righteous
நல்லவர்களாக
fa-innahu
فَإِنَّهُۥ
then indeed He
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
lil'awwābīna
لِلْأَوَّٰبِينَ
to those who often turn (to Him)
மீளுகிறவர்களுக்கு
ghafūran
غَفُورًا
Most Forgiving
மகா மன்னிப்பாளனாக

Transliteration:

Rabbukum a'lamu bimaa fee nufoosikum; in takoonoo saaliheena fa innahoo kaana lil awwaabeena Ghafoooraa (QS. al-ʾIsrāʾ:25)

English Sahih International:

Your Lord is most knowing of what is within yourselves. If you should be righteous [in intention] – then indeed He is ever, to the often returning [to Him], Forgiving. (QS. Al-Isra, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் மிக்க நன்கறிவான். நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கின்றான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௨௫)

Jan Trust Foundation

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் மனங்களில் உள்ளதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன். நீங்கள் நல்லவர்களாக இருந்தால் நிச்சயமாக அவன், (தன் தவறுகளை விட்டு திருந்தி நன்மையின் பக்கம்) முற்றிலுமாக மீளுகிறவர்களுக்கு மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.