Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨௪

Qur'an Surah Al-Isra Verse 24

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِيْ صَغِيْرًاۗ (الإسراء : ١٧)

wa-ikh'fiḍ
وَٱخْفِضْ
And lower
இன்னும் தாழ்த்து
lahumā
لَهُمَا
to them
அவர்களுக்கு முன்
janāḥa l-dhuli
جَنَاحَ ٱلذُّلِّ
(the) wing (of) humility
இறக்கையை/ பணிவின்
mina l-raḥmati
مِنَ ٱلرَّحْمَةِ
(out) of [the] mercy
கருணையுடன்
waqul
وَقُل
and say
இன்னும் கூறு!
rabbi
رَّبِّ
"My Lord!
என் இறைவா
ir'ḥamhumā
ٱرْحَمْهُمَا
Have mercy on both of them
நீயும் கருணை புரி!/அவ்விருவருக்கு
kamā rabbayānī
كَمَا رَبَّيَانِى
as they brought me up
அவர்கள் வளர்த்தவாறே/என்னை
ṣaghīran
صَغِيرًا
(when I was) small"
சிறியவனாக

Transliteration:

Wakhfid lahumaa janaahaz zulli minar rahmati wa qur Rabbir hamhumaa kamaa rabbayaanee sagheera (QS. al-ʾIsrāʾ:24)

English Sahih International:

And lower to them the wing of humility out of mercy and say, "My Lord, have mercy upon them as they brought me up [when I was] small." (QS. Al-Isra, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்! (பனீ இஸ்ராயீல், வசனம் ௨௪)

Jan Trust Foundation

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கருணையுடன் பணிவின் இறக்கையை அவர்களுக்கு முன் தாழ்த்து! (மிக்க அன்புடன் பணிந்து நட,) “என் இறைவா! என்னை நான் சிறியவனாக இருக்கும் போது அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி!” என்று கூறு!