Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௨

Qur'an Surah Al-Isra Verse 2

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِيْ وَكِيْلًاۗ (الإسراء : ١٧)

waātaynā
وَءَاتَيْنَا
And We gave
கொடுத்தோம்
mūsā
مُوسَى
Musa
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
wajaʿalnāhu
وَجَعَلْنَٰهُ
and made it
இன்னும் ஆக்கினோம்/அதை
hudan
هُدًى
a guidance
நேர்வழி காட்டியாக
libanī
لِّبَنِىٓ
for the Children
சந்ததிகளுக்கு
is'rāīla
إِسْرَٰٓءِيلَ
(of) Israel
இஸ்ராயீலின்
allā tattakhidhū
أَلَّا تَتَّخِذُوا۟
"That not you take
நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று
min dūnī
مِن دُونِى
other than Me other than Me
என்னைத் தவிர
wakīlan
وَكِيلًا
(as) a Disposer of affairs"
பொறுப்பாளனாக (பாதுகாவலனாக)

Transliteration:

Wa aatainaa Moosal-Kitaaba wa ja'alnaahu hudal-liBaneee Israaa'eel; (QS. al-ʾIsrāʾ:2)

English Sahih International:

And We gave Moses the Scripture and made it a guidance for the Children of Israel that you not take other than Me as Disposer of affairs, (QS. Al-Isra, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதனை ஒரு வழிகாட்டியாக அமைத்து "நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௨)

Jan Trust Foundation

இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டியாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம்.