குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௮
Qur'an Surah Al-Isra Verse 18
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِيْهَا مَا نَشَاۤءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَۚ يَصْلٰىهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا (الإسراء : ١٧)
- man
- مَّن
- Whoever
- எவர்
- kāna
- كَانَ
- should
- இருப்பார்
- yurīdu
- يُرِيدُ
- desire
- நாடுகின்றவராக
- l-ʿājilata
- ٱلْعَاجِلَةَ
- the immediate
- இம்மையை
- ʿajjalnā
- عَجَّلْنَا
- We hasten
- முற்படுத்தி கொடுப்போம்
- lahu fīhā
- لَهُۥ فِيهَا
- for him in it
- அவருக்கு/அதில்
- mā nashāu
- مَا نَشَآءُ
- what We will
- எதை/நாடுவோம்
- liman
- لِمَن
- to whom
- எவருக்கு
- nurīdu thumma
- نُّرِيدُ ثُمَّ
- We intend Then
- நாடுவோம்/பிறகு
- jaʿalnā
- جَعَلْنَا
- We have made
- ஆக்குவோம்
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்கு
- jahannama
- جَهَنَّمَ
- Hell
- நரகத்தை
- yaṣlāhā
- يَصْلَىٰهَا
- he will burn
- எரிந்து பொசுங்குவார்/அதில்
- madhmūman
- مَذْمُومًا
- disgraced
- இகழப்பட்டவராக
- madḥūran
- مَّدْحُورًا
- rejected
- தூரமாக்கப்பட்டவராக
Transliteration:
Man kaana yureedul 'aajilata 'ajjalnaa lahoo feehaa maa nashaaa'u liman nureedu summa ja'alnaa lahoo Jahannama yaslaahaa mazmoomammad hooraa(QS. al-ʾIsrāʾ:18)
English Sahih International:
Whoever should desire the immediate – We hasten for him from it what We will to whom We intend. Then We have made for him Hell, which he will [enter to] burn, censured and banished. (QS. Al-Isra, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௮)
Jan Trust Foundation
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர், (அவசரமான) இம்மை (வாழ்க்கை)யை (மட்டும்) நாடுகின்றவராக இருப்பாரோ (அப்படிப்பட்டவர்களில்) நாம் நாடுபவருக்கு நாம் நாடுவதை (மட்டும்) அதில் முற்படுத்திக் கொடுப்போம். பிறகு, அவருக்கு நரகத்தை (தங்குமிடமாக) ஆக்குவோம். அவர் இகழப்பட்டவராக, (நம் அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக (கேவலமாக தள்ளப்பட்டு) அதில் எரிந்து பொசுங்குவார்.