Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௭

Qur'an Surah Al-Isra Verse 17

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْۢ بَعْدِ نُوْحٍۗ وَكَفٰى بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرًاۢ بَصِيْرًا (الإسراء : ١٧)

wakam
وَكَمْ
And how many
எத்தனை
ahlaknā
أَهْلَكْنَا
We destroyed
அழித்தோம்
mina l-qurūni
مِنَ ٱلْقُرُونِ
from the generations
தலைமுறைகளை
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
nūḥin
نُوحٍۗ
Nuh!
நூஹூக்கு
wakafā
وَكَفَىٰ
And sufficient
இன்னும் போதுமானவன்
birabbika
بِرَبِّكَ
(is) your Lord
உம் இறைவனே
bidhunūbi
بِذُنُوبِ
concerning the sins
பாவங்களை
ʿibādihi
عِبَادِهِۦ
(of) His servants
தன் அடியார்களின்
khabīran
خَبِيرًۢا
All-Aware
ஆழ்ந்தறிபவனாக
baṣīran
بَصِيرًا
All-Seer
உற்று நோக்குபவனாக

Transliteration:

Wa kam ahlaknaa minal qurooni mim ba'di Nooh; wa kafaa bi Rabbika bizunoobi 'ibaadihee Khabeeram Baseeraa (QS. al-ʾIsrāʾ:17)

English Sahih International:

And how many have We destroyed from the generations after Noah. And sufficient is your Lord, concerning the sins of His servants, as Aware and Seeing. (QS. Al-Isra, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழிந்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவை யில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௭)

Jan Trust Foundation

நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூஹுக்குப் பின்னர் எத்தனையோ (பல) தலைமுறைகளை அழித்தோம். தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிய, உற்று நோக்க உம் இறைவனே போதுமானவன்.