Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௫

Qur'an Surah Al-Isra Verse 15

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَاۗ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۗ وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا (الإسراء : ١٧)

mani ih'tadā
مَّنِ ٱهْتَدَىٰ
Whoever (is) guided
எவர்/நேர்வழிசெல்வார்
fa-innamā yahtadī
فَإِنَّمَا يَهْتَدِى
then only he is guided
அவர் நேர்வழி செல்வதெல்லாம்
linafsihi
لِنَفْسِهِۦۖ
for his soul
தன் நன்மைக்காக
waman ḍalla
وَمَن ضَلَّ
And whoever goes astray
இன்னும் எவர்/வழிகெடுவார்
fa-innamā yaḍillu
فَإِنَّمَا يَضِلُّ
then only he goes astray
அவர் வழிகெடுவதெல்லாம்
ʿalayhā
عَلَيْهَاۚ
against it
தனக்கெதிராக
walā taziru
وَلَا تَزِرُ
And not will bear
சுமக்காது
wāziratun
وَازِرَةٌ
one laden with burden
சுமக்கக்கூடியது
wiz'ra
وِزْرَ
burden
(பாவச்) சுமையை
ukh'rā
أُخْرَىٰۗ
(of) another
மற்றொன்றின்
wamā kunnā
وَمَا كُنَّا
And not We
நாம் இருக்கவில்லை
muʿadhibīna
مُعَذِّبِينَ
are to punish
வேதனை செய்பவர்களாக
ḥattā nabʿatha
حَتَّىٰ نَبْعَثَ
until We have sent
நாம் அனுப்பும் வரை
rasūlan
رَسُولًا
a Messenger
ஒரு தூதரை

Transliteration:

Manihtadaa fa innamaa yahtadee linafsihee wa man dalla fa innamaa yadillu 'alaihaa; wa laa taziru waaziratunw wizra ukhraa; wa maa kunnaa mu'azzibeena hatta nab'asa Rasoola (QS. al-ʾIsrāʾ:15)

English Sahih International:

Whoever is guided is only guided for [the benefit of] his soul. And whoever errs only errs against it. And no bearer of burdens will bear the burden of another. And never would We punish until We sent a messenger. (QS. Al-Isra, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை. (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௫)

Jan Trust Foundation

எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் நேர்வழி செல்வாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெடுவாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கெதிராகத் தான். சுமக்கக்கூடியது மற்றொன்றின் (பாவச்) சுமையை சுமக்காது. நாம் ஒரு தூதரை அனுப்பும் வரை (எவரையும்) வேதனை செய்பவர்களாக நாம் இருக்கவில்லை.