Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௨

Qur'an Surah Al-Isra Verse 12

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنَا الَّيْلَ وَالنَّهَارَ اٰيَتَيْنِ فَمَحَوْنَآ اٰيَةَ الَّيْلِ وَجَعَلْنَآ اٰيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ وَلِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَۗ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنٰهُ تَفْصِيْلًا (الإسراء : ١٧)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We have made
ஆக்கினோம்
al-layla wal-nahāra
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
the night and the day
இரவை/இன்னும் பகலை
āyatayni
ءَايَتَيْنِۖ
(as) two signs
இரு அத்தாட்சிகளாக
famaḥawnā
فَمَحَوْنَآ
Then We erased
இன்னும் மங்கச்செய்தோம்
āyata
ءَايَةَ
(the) sign
அத்தாட்சியை
al-layli
ٱلَّيْلِ
(of) the night
இரவின்
wajaʿalnā
وَجَعَلْنَآ
and We made
இன்னும் ஆக்கினோம்
āyata
ءَايَةَ
(the) sign
அத்தாட்சியை
l-nahāri
ٱلنَّهَارِ
(of) the day
பகலின்
mub'ṣiratan
مُبْصِرَةً
visible
ஒளிரக்கூடியதாக
litabtaghū
لِّتَبْتَغُوا۟
that you may seek
நீங்கள் தேடுவதற்காக
faḍlan min
فَضْلًا مِّن
bounty from
அருளை/இருந்து
rabbikum
رَّبِّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
walitaʿlamū
وَلِتَعْلَمُوا۟
and that you may know
இன்னும் அறிவதற்காக
ʿadada
عَدَدَ
(the) number
எண்ணிக்கையை
l-sinīna
ٱلسِّنِينَ
(of) the years
ஆண்டுகளின்
wal-ḥisāba
وَٱلْحِسَابَۚ
and the account
இன்னும் கணக்கை
wakulla shayin
وَكُلَّ شَىْءٍ
And every thing -
எல்லா விஷயங்களையும்
faṣṣalnāhu
فَصَّلْنَٰهُ
We have explained it
விவரித்தோம்/ அவற்றை
tafṣīlan
تَفْصِيلًا
(in) detail
விரிவாக

Transliteration:

Wa ja'alnal laila wannahaara Aayatayni famahawnaaa Aayatal laili wa ja'alnaaa Aayatan nahaari mubsiratal litabtaghoo fadlam mir Rabbikum wa lita'lamoo 'adadas sineena walhisaab; wa kulla shai'in fassalnaahu tafseelaa (QS. al-ʾIsrāʾ:12)

English Sahih International:

And We have made the night and day two signs, and We erased the sign of the night and made the sign of the day visible that you may seek bounty from your Lord and may know the number of years and the account [of time]. And everything We have set out in detail. (QS. Al-Isra, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையை(யும் மாதங்களின் கணக்கையும் இதன் மூலம்) நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௨)

Jan Trust Foundation

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; இரவின் அத்தாட்சியை மங்கச்செய்தோம்; பகலின் அத்தாட்சியை ஒளிரக்கூடியதாக ஆக்கினோம்; உங்கள் இறைவன் புறத்திலிருந்து அருளை நீங்கள் தேடுவதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்கள் இன்னும் நேரங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காகவும் (இப்படி அமைத்தோம்). எல்லா விஷயங்களையும் -அவற்றை நாம் விரிவாக விவரித்தோம்.