Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௧௧

Qur'an Surah Al-Isra Verse 111

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِيٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيْرًا ࣖ (الإسراء : ١٧)

waquli
وَقُلِ
And say
இன்னும் கூறுவீராக
l-ḥamdu
ٱلْحَمْدُ
"All Praise
புகழனைத்தும்
lillahi
لِلَّهِ
(is) for Allah
அல்லாஹ்வுக்குரியதே
alladhī
ٱلَّذِى
the One Who
எத்தகையவன்
lam yattakhidh
لَمْ يَتَّخِذْ
has not taken has not taken
அவன் ஆக்கிக் கொள்ளவில்லை
waladan
وَلَدًا
a son
குழந்தையை
walam yakun
وَلَمْ يَكُن
and not is
இன்னும் அறவே இல்லை
lahu
لَّهُۥ
for Him
அவனுக்கு
sharīkun
شَرِيكٌ
a partner
இணை
fī l-mul'ki
فِى ٱلْمُلْكِ
in the dominion
ஆட்சியில்
walam yakun
وَلَمْ يَكُن
and not is
அறவே இல்லை
lahu
لَّهُۥ
for Him
அவனுக்கு
waliyyun
وَلِىٌّ
any protector
நண்பன்
mina l-dhuli
مِّنَ ٱلذُّلِّۖ
out of weakness
பலவீனத்தினால்
wakabbir'hu
وَكَبِّرْهُ
And magnify Him
இன்னும் பெருமைப்படுத்துவீராக/அவனை
takbīran
تَكْبِيرًۢا
(with all) magnificence"
பெருமைப்படுத்துதல்

Transliteration:

Wa qulil hamdu lillaahil lazee lam yattakhiz waladanw wa lam yakul lahoo shareekun fil mulki wa lam yakul lahoo waliyyum minaz zulli wa kabbirhu takbeeraa (QS. al-ʾIsrāʾ:111)

English Sahih International:

And say, "Praise to Allah, who has not taken a son and has had no partner in [His] dominion and has no [need of a] protector out of weakness; and glorify Him with [great] glorification." (QS. Al-Isra, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு யாதொரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவன் பலவீனனாக இருக்கின்றான் என்று (கூறுவதற்குமில்லை.) அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை." ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுங்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

“அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! “புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் குழந்தையை (தனக்கு) ஆக்கிக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு அறவே இணை இல்லை. பலவீனத்தினால் அவனுக்கு நண்பன் அறவே இல்லை.” அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக!