Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௧௦

Qur'an Surah Al-Isra Verse 110

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَۗ اَيًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَاۤءُ الْحُسْنٰىۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰلِكَ سَبِيْلًا (الإسراء : ١٧)

quli
قُلِ
Say
கூறுவீராக
id'ʿū
ٱدْعُوا۟
"Invoke
அழையுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
awi
أَوِ
or
அல்லது
id'ʿū
ٱدْعُوا۟
invoke
அழையுங்கள்
l-raḥmāna
ٱلرَّحْمَٰنَۖ
the Most Gracious
பேரருளாளன்
ayyan mā
أَيًّا مَّا
By whatever (name) By whatever (name)
எப்படி, எதை
tadʿū
تَدْعُوا۟
you invoke
அழைத்தாலும்
falahu l-asmāu
فَلَهُ ٱلْأَسْمَآءُ
to Him (belongs) the Most Beautiful Names
அவனுக்கு/பெயர்கள்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۚ
the Most Beautiful Names
மிக அழகியவை
walā tajhar
وَلَا تَجْهَرْ
And (do) not be loud
மிக சப்தமிட்டு ஓதாதீர்
biṣalātika
بِصَلَاتِكَ
in your prayers
உமது தொழுகையில்
walā tukhāfit
وَلَا تُخَافِتْ
and not be silent
மிக மெதுவாகவும் ஓதாதீர்
bihā
بِهَا
therein
அதில்
wa-ib'taghi
وَٱبْتَغِ
but seek
தேடுவீராக
bayna
بَيْنَ
between
இடையில்
dhālika
ذَٰلِكَ
that
அது
sabīlan
سَبِيلًا
a way"
ஒரு வழியை

Transliteration:

Qulid'ul laaha awid'ur Rahmaana ayyam maa tad'oo falahul asmaaa'ul Husnaa; wa laa tajhar bi Salaatika wa laa tukhaafit bihaa wabtaghi baina zaalika sabeela (QS. al-ʾIsrāʾ:110)

English Sahih International:

Say, "Call upon Allah or call upon the Most Merciful [ar-Rahman]. Whichever [name] you call – to Him belong the best names." And do not recite [too] loudly in your prayer or [too] quietly but seek between that an [intermediate] way. (QS. Al-Isra, Ayah ௧௧௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது ரஹ்மான் என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப் பெயர்கள் இருக்கின்றன." (நபியே!) உங்களுடைய தொழுகையில் நீங்கள் மிக சப்தமிட்டு ஓதாதீர்கள்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்கள்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடியுங்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௧௦)

Jan Trust Foundation

“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (அவ்விரு பெயர்களில்) எதை (கூறி) நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு (இன்னும்) மிக அழகிய (பல) பெயர்கள் உள்ளன.” (நபியே!) உமது தொழுகையில் (அதில் ஓதப்படும் குர்ஆனையும் பிரார்த்தனையையும்) மிக சப்தமிட்டு ஓதாதீர்! அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்! அதற்கிடையில் (மிதமான) ஒரு வழியைத் தேடுவீராக!