குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௭
Qur'an Surah Al-Isra Verse 107
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اٰمِنُوْا بِهٖٓ اَوْ لَا تُؤْمِنُوْاۗ اِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖٓ اِذَا يُتْلٰى عَلَيْهِمْ يَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًاۙ (الإسراء : ١٧)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- āminū
- ءَامِنُوا۟
- "Believe
- நம்பிக்கை கொள்ளுங்கள்
- bihi aw
- بِهِۦٓ أَوْ
- in it or
- இதை/அல்லது
- lā tu'minū
- لَا تُؤْمِنُوٓا۟ۚ
- (do) not believe
- நம்பிக்கை கொள்ளாதீர்கள்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- were given
- கொடுக்கப்பட்டனர்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- the knowledge
- கல்வி
- min qablihi
- مِن قَبْلِهِۦٓ
- before it before it
- இதற்கு முன்னர்
- idhā yut'lā
- إِذَا يُتْلَىٰ
- when it is recited
- ஓதப்பட்டால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்கள் மீது
- yakhirrūna
- يَخِرُّونَ
- they fall
- விழுவார்கள்
- lil'adhqāni
- لِلْأَذْقَانِ
- on their faces
- தாடைகள் மீது
- sujjadan
- سُجَّدًا
- (in) prostration"
- சிரம்பணிந்தவர்களாக
Transliteration:
Qul aaaniminoo biheee aw laa tu'minoo; innal lazeena ootul 'ilma min qabliheee izaa yutlaa 'alaihim yakhirroona lil azqaani sujjadaa(QS. al-ʾIsrāʾ:107)
English Sahih International:
Say, "Believe in it or do not believe." Indeed, those who were given knowledge before it – when it is recited to them, they fall upon their faces in prostration, (QS. Al-Isra, Ayah ௧௦௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் (இந்தக் குர்ஆனை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதனை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம் பணிவார்கள். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௭)
Jan Trust Foundation
(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! “(மக்களே) நீங்கள் (இதை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதீர்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் (முந்திய வேதங்களின் உண்மையான) கல்வி கொடுக்கப்பட்(டு அதன்படி இதை நம்பிக்கை கொண்)டவர்கள், அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் சிரம் பணிந்தவர்களாக தாடைகள் மீது விழுவார்கள்.