Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௬

Qur'an Surah Al-Isra Verse 106

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِيْلًا (الإسراء : ١٧)

waqur'ānan
وَقُرْءَانًا
And the Quran
இன்னும் குர்ஆனாக
faraqnāhu
فَرَقْنَٰهُ
We have divided
நாம் தெளிவு படுத்தினோம்/இதை
litaqra-ahu
لِتَقْرَأَهُۥ
that you might recite it
நீர் ஓதுவதற்காக/இதை
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
to the people
மக்களுக்கு
ʿalā muk'thin
عَلَىٰ مُكْثٍ
at intervals
கவனத்துடன்
wanazzalnāhu
وَنَزَّلْنَٰهُ
And We have revealed it
இன்னும் இறக்கினோம்/இதை
tanzīlan
تَنزِيلًا
(in) stages
கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்

Transliteration:

Wa quraanan faraqnaahu litaqra ahoo 'alan naasi 'alaa muksinw wa nazzalnaahu tanzeelaa (QS. al-ʾIsrāʾ:106)

English Sahih International:

And [it is] a Quran which We have separated [by intervals] that you might recite it to the people over a prolonged period. And We have sent it down progressively. (QS. Al-Isra, Ayah ௧௦௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) மனிதர்களுக்கு நீங்கள் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச் சிறுகவும் இறக்கி வைக்கிறோம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௬)

Jan Trust Foundation

இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) குர்ஆனை நாம் தெளிவுபடுத்தி (இறக்கி)னோம் மக்களுக்கு இதை நீர் கவனத்துடன் (தெளிவாக) ஓதுவதற்காக. இன்னும் இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்.