Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௪

Qur'an Surah Al-Isra Verse 104

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّقُلْنَا مِنْۢ بَعْدِهٖ لِبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَاۤءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيْفًاۗ (الإسراء : ١٧)

waqul'nā
وَقُلْنَا
And We said
இன்னும் நாம் கூறினோம்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
after him after him
இதன் பின்னர்
libanī
لِبَنِىٓ
to the Children of Israel
சந்ததிகளுக்கு
is'rāīla
إِسْرَٰٓءِيلَ
to the Children of Israel
இஸ்ராயீலின்
us'kunū
ٱسْكُنُوا۟
"Dwell
நீங்கள் வசியுங்கள்
l-arḍa
ٱلْأَرْضَ
(in) the land
பூமியில்
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
then when comes
வந்தால்
waʿdu l-ākhirati
وَعْدُ ٱلْءَاخِرَةِ
(the) promise (of) the Hereafter
வாக்குறுதி/மறுமையின்
ji'nā bikum
جِئْنَا بِكُمْ
We will bring you
உங்களை வரவைப்போம்
lafīfan
لَفِيفًا
(as) a mixed crowd"
அனைவரையும், ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக

Transliteration:

Wa qulnaa mim ba'dihee li Baneee Israaa'eelas kunul arda faizaa jaaa'a wa'dulaakhirati ji'naa bikum lafeefaa (QS. al-ʾIsrāʾ:104)

English Sahih International:

And We said after him [i.e., Pharaoh] to the Children of Israel, "Dwell in the land, and when there comes the promise [i.e., appointment] of the Hereafter, We will bring you forth in [one] gathering." (QS. Al-Isra, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: "நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதன் பின்னர், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசியுங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக வரவைப்போம்.