குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௨
Qur'an Surah Al-Isra Verse 102
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ لَقَدْ عَلِمْتَ مَآ اَنْزَلَ هٰٓؤُلَاۤءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَاۤىِٕرَۚ وَاِنِّيْ لَاَظُنُّكَ يٰفِرْعَوْنُ مَثْبُوْرًا (الإسراء : ١٧)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- laqad
- لَقَدْ
- "Verily
- திட்டவட்டமாக
- ʿalim'ta
- عَلِمْتَ
- you know
- நீ அறிந்தாய்
- mā anzala
- مَآ أَنزَلَ
- none has sent down
- இறக்கிவைக்கவில்லை
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- these
- இவற்றை
- illā
- إِلَّا
- except
- தவிர
- rabbu
- رَبُّ
- (the) Lord
- இறைவன்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- வானங்களின்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமி
- baṣāira
- بَصَآئِرَ
- (as) evidence
- தெளிவான அத்தாட்சிகளாக
- wa-innī
- وَإِنِّى
- and indeed I
- இன்னும் நிச்சயமாக நான்
- la-aẓunnuka
- لَأَظُنُّكَ
- [I] surely think you
- எண்ணுகிறேன்/உன்னை
- yāfir'ʿawnu
- يَٰفِرْعَوْنُ
- O Firaun!
- ஃபிர்அவ்னே
- mathbūran
- مَثْبُورًا
- (you are) destroyed"
- அழிந்துவிடுபவனாக
Transliteration:
Qaala laqad 'alimta maaa anzala haaa'ulaaa'i illaa Rabbus samaawaati wal ardi basaaa'ira wa innee la azun nuka yaa Fir'awnu masbooraa(QS. al-ʾIsrāʾ:102)
English Sahih International:
[Moses] said, "You have already known that none has sent down these [signs] except the Lord of the heavens and the earth as evidence, and indeed I think, O Pharaoh, that you are destroyed." (QS. Al-Isra, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
அதற்கு மூஸா (அவனை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கி வைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு காலம் பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்" என்று கூறினார். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மூஸா) கூறினார்: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்தாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக எண்ணுகிறேன்”என்று கூறினார்.