Skip to content

குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௧

Qur'an Surah Al-Isra Verse 101

பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى تِسْعَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ فَسْـَٔلْ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اِذْ جَاۤءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّيْ لَاَظُنُّكَ يٰمُوْسٰى مَسْحُوْرًا (الإسراء : ١٧)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
We had given
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَىٰ
Musa
மூஸாவிற்கு
tis'ʿa
تِسْعَ
nine
ஒன்பது
āyātin
ءَايَٰتٍۭ
Signs
அத்தாட்சிகள்
bayyinātin
بَيِّنَٰتٍۖ
clear
தெளிவானவை
fasal
فَسْـَٔلْ
so ask
ஆகவே கேட்பீராக
banī
بَنِىٓ
(the) Children of Israel
சந்ததிகளை
is'rāīla
إِسْرَٰٓءِيلَ
(the) Children of Israel
இஸ்ராயீலின்
idh
إِذْ
when
அவர் வந்த போது
jāahum
جَآءَهُمْ
he came to them
அவர்களிடம்
faqāla
فَقَالَ
then said
கூறினான்
lahu
لَهُۥ
to him
அவரைக் நோக்கி
fir'ʿawnu
فِرْعَوْنُ
Firaun
ஃபிர்அவ்ன்
innī
إِنِّى
"Indeed, I
நிச்சயமாக நான்
la-aẓunnuka
لَأَظُنُّكَ
[I] think you
எண்ணுகிறேன்/உம்மை
yāmūsā
يَٰمُوسَىٰ
O Musa!
மூஸாவே!
masḥūran
مَسْحُورًا
(you are) bewitched"
சூனியக்காரராக

Transliteration:

Wa laqad aatainaa Moosaa tis'a Aayaatim baiyinaatin fas'al Baneee Israaa'eela iz jaaa'ahum faqaala lahoo Fir'awnu inee la azunnuka yaa Moosaa mas hooraa (QS. al-ʾIsrāʾ:101)

English Sahih International:

And We had certainly given Moses nine evident signs, so ask the Children of Israel [about] when he came to them and Pharaoh said to him, "Indeed I think, O Moses, that you are affected by magic." (QS. Al-Isra, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) நீங்கள் இஸ்ராயீலின் சந்ததிகளைக் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி "மூஸாவே! நிச்சயமாக நீங்கள் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உங்களை எண்ணுகிறேன்" என்று கூறினான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக, நாம் மூஸாவிற்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆகவே, (நபியே) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! அவர் (மூஸா) அவர்களிடம் வந்தபோது (நடந்தது என்ன?). ஃபிர்அவ்ன் அவரைக் நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியக்காரராக எண்ணுகிறேன்”என்று கூறினான்.