குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧௦௦
Qur'an Surah Al-Isra Verse 100
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لَّوْ اَنْتُمْ تَمْلِكُوْنَ خَزَاۤىِٕنَ رَحْمَةِ رَبِّيْٓ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِۗ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا ࣖ (الإسراء : ١٧)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- law antum tamlikūna
- لَّوْ أَنتُمْ تَمْلِكُونَ
- "If you possess
- நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால்
- khazāina
- خَزَآئِنَ
- the treasures
- பொக்கிஷங்களை
- raḥmati
- رَحْمَةِ
- (of) the Mercy
- அருளின்
- rabbī
- رَبِّىٓ
- (of) my Lord
- என் இறைவனுடைய
- idhan
- إِذًا
- then
- அப்போது
- la-amsaktum
- لَّأَمْسَكْتُمْ
- surely you would withhold
- தடுத்துக் கொண்டிருப்பீர்கள்
- khashyata
- خَشْيَةَ
- (out of) fear
- பயந்து
- l-infāqi
- ٱلْإِنفَاقِۚ
- (of) spending"
- தர்மம் செய்வது
- wakāna l-insānu
- وَكَانَ ٱلْإِنسَٰنُ
- And is man
- இருக்கின்றான்/ மனிதன்
- qatūran
- قَتُورًا
- stingy
- மகா கஞ்சனாக
Transliteration:
Qul law antum tamlikoona khazaaa'ina rahmati Rabbeee izal la amsaktum khash yatal infaaq; wa kaanal insaanu qatooraa(QS. al-ʾIsrāʾ:100)
English Sahih International:
Say [to them], "If you possessed the depositories of the mercy of my Lord, then you would withhold out of fear of spending." And ever has man been stingy. (QS. Al-Isra, Ayah ௧௦௦)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகிவிடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧௦௦)
Jan Trust Foundation
“என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! என் இறைவனுடைய அருளின் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால், அப்போது தர்மம் செய்வதை பயந்து (எவருக்கும் கொடுக்காது) தடுத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மகா கஞ்சனாக இருக்கின்றான்.