குர்ஆன் ஸூரா பனீ இஸ்ராயீல் வசனம் ௧
Qur'an Surah Al-Isra Verse 1
பனீ இஸ்ராயீல் [௧௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سُبْحٰنَ الَّذِيْٓ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِيْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَاۗ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ (الإسراء : ١٧)
- sub'ḥāna
- سُبْحَٰنَ
- Exalted
- மிகப் பரிசுத்தமானவன்
- alladhī
- ٱلَّذِىٓ
- (is) the One Who
- எத்தகையவன்
- asrā
- أَسْرَىٰ
- took
- அழைத்துச்சென்றான்
- biʿabdihi
- بِعَبْدِهِۦ
- His servant
- தன் அடிமையை
- laylan
- لَيْلًا
- (by) night
- இரவில்
- mina l-masjidi
- مِّنَ ٱلْمَسْجِدِ
- from Al-Masjid Al-Haraam
- இருந்து/மஸ்ஜிது
- l-ḥarāmi
- ٱلْحَرَامِ
- Al-Masjid Al-Haraam
- புனிதமானது
- ilā l-masjidi
- إِلَى ٱلْمَسْجِدِ
- to Al-Masjid Al-Aqsa
- வரை/அல் மஸ்ஜிது
- l-aqṣā
- ٱلْأَقْصَا
- Al-Masjid Al-Aqsa
- அல் அக்ஸா
- alladhī
- ٱلَّذِى
- which
- எது
- bāraknā
- بَٰرَكْنَا
- We blessed
- அருள் வளம் புரிந்தோம்
- ḥawlahu
- حَوْلَهُۥ
- its surroundings
- அதைச் சுற்றி
- linuriyahu
- لِنُرِيَهُۥ
- that We may show him
- நாம் காண்பிப்பதற்காக/அவருக்கு
- min āyātinā
- مِنْ ءَايَٰتِنَآۚ
- of Our Signs
- நம் அத்தாட்சிகளில்
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- Indeed He He
- நிச்சயமாக அவன்தான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- (is) the All-Hearer
- நன்கு செவியுறுபவன்
- l-baṣīru
- ٱلْبَصِيرُ
- the All-Seer
- உற்று நோக்குபவன்
Transliteration:
Subhaanal lazeee asraa bi'abdihee lailam minal Masjidil Haraami ilal Masjidil Aqsal-lazee baaraknaa haw lahoo linuriyahoo min aayaatinaa;innahoo Huwas Samee'ul-Baseer(QS. al-ʾIsrāʾ:1)
English Sahih International:
Exalted is He who took His Servant [i.e., Prophet Muhammad] by night from al-Masjid al-Haram to al-Masjid al-Aqsa, whose surroundings We have blessed, to show him of Our signs. Indeed, He is the Hearing, the Seeing. (QS. Al-Isra, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (பனீ இஸ்ராயீல், வசனம் ௧)
Jan Trust Foundation
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
புனிதமான மஸ்ஜிதிலிருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை (முஹம்மது நபி)க்கு தன் அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) காண்பிப்பதற்காக அவரை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ம் மஸ்ஜி)தைச் சுற்றி அருள் வளம் புரிந்தோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.