Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 9

Al-Isra

(al-ʾIsrāʾ)

௮௧

وَقُلْ جَاۤءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۖاِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا ٨١

waqul
وَقُلْ
இன்னும் கூறுவீராக
jāa
جَآءَ
வந்தது
l-ḥaqu
ٱلْحَقُّ
சத்தியம்
wazahaqa
وَزَهَقَ
இன்னும் அழிந்தது
l-bāṭilu
ٱلْبَٰطِلُۚ
அசத்தியம்
inna l-bāṭila
إِنَّ ٱلْبَٰطِلَ
நிச்சயமாகஅசத்தியம்
kāna
كَانَ
இருக்கின்றது
zahūqan
زَهُوقًا
அழியக்கூடியதாக
அன்றி, "சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்றும் கூறுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௧)
Tafseer
௮௨

وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَاۤءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا ٨٢

wanunazzilu
وَنُنَزِّلُ
இறக்குகிறோம்
mina l-qur'āni
مِنَ ٱلْقُرْءَانِ
குர்ஆனில்
مَا
எது
huwa
هُوَ
அது
shifāon
شِفَآءٌ
நோய் நிவாரணி
waraḥmatun
وَرَحْمَةٌ
இன்னும் அருள்
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَۙ
நம்பிக்கையாளர்களுக்கு
walā yazīdu
وَلَا يَزِيدُ
அதிகப்படுத்தாது
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
illā khasāran
إِلَّا خَسَارًا
நஷ்டத்தைத் தவிர
நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் பரிகார மாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௨)
Tafseer
௮௩

وَاِذَآ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَـُٔوْسًا ٨٣

wa-idhā anʿamnā
وَإِذَآ أَنْعَمْنَا
நாம் அருள் புரிந்தால்
ʿalā l-insāni
عَلَى ٱلْإِنسَٰنِ
மனிதனுக்கு
aʿraḍa
أَعْرَضَ
புறக்கணிக்கின்றான்
wanaā bijānibihi
وَنَـَٔا بِجَانِبِهِۦۖ
இன்னும் தூரமாகி விடுகிறான்
wa-idhā massahu
وَإِذَا مَسَّهُ
அணுகினால்/அவனை
l-sharu
ٱلشَّرُّ
ஒரு தீங்கு
kāna
كَانَ
ஆகிவிடுகின்றான்
yaūsan
يَـُٔوسًا
நிராசையுடையவனாக
நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை யாதொரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்துவிடுகிறான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௩)
Tafseer
௮௪

قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖۗ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا ࣖ ٨٤

qul
قُلْ
கூறுவீராக
kullun
كُلٌّ
ஒவ்வொருவரும்
yaʿmalu
يَعْمَلُ
அமல் செய்கிறார்
ʿalā shākilatihi
عَلَىٰ شَاكِلَتِهِۦ
தனது பாதையில்
farabbukum
فَرَبُّكُمْ
ஆகவே, உங்களது இறைவன்தான்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
biman
بِمَنْ
யார் என்பதை
huwa
هُوَ
அவர்
ahdā
أَهْدَىٰ
மிக நேர்வழி பெற்றவர்
sabīlan
سَبِيلًا
பாதையால்
(ஆகவே, நபியே!) நீங்கள் கூறுங்கள்: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவைகளையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௪)
Tafseer
௮௫

وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الرُّوْحِۗ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّيْ وَمَآ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا ٨٥

wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
கேட்கிறார்கள்/உம்மிடம்
ʿani
عَنِ
பற்றி
l-rūḥi
ٱلرُّوحِۖ
ரூஹ்
quli
قُلِ
கூறுவீராக
l-rūḥu
ٱلرُّوحُ
ரூஹ்
min amri
مِنْ أَمْرِ
கட்டளையினால்
rabbī
رَبِّى
என் இறைவன்
wamā ūtītum
وَمَآ أُوتِيتُم
நீங்கள் கொடுக்கப்படவில்லை
mina l-ʿil'mi
مِّنَ ٱلْعِلْمِ
கல்வியில்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
தவிர/சொற்பமே
(நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௫)
Tafseer
௮௬

وَلَىِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهٖ عَلَيْنَا وَكِيْلًاۙ؉؉ ٨٦

wala-in
وَلَئِن
shi'nā
شِئْنَا
நாம் நாடினால்
lanadhhabanna
لَنَذْهَبَنَّ
நிச்சயம் போக்கி விடுவோம்
bi-alladhī
بِٱلَّذِىٓ
எவற்றை
awḥaynā
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
thumma
ثُمَّ
பிறகு
lā tajidu
لَا تَجِدُ
காணமாட்டீர்
laka
لَكَ
உமக்கு
bihi
بِهِۦ
அதற்கு
ʿalaynā
عَلَيْنَا
நமக்கு எதிராக
wakīlan
وَكِيلًا
ஒரு பொறுப்பாளரை
(நபியே!) நாம் விரும்பினால் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்த இந்தக் குர்ஆனையே (உங்களிடமிருந்து) போக்கி விடுவோம். பின்னர், (இதனை உங்களிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உங்களுக்கு உதவி செய்ய எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௬)
Tafseer
௮௭

اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَۗ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَيْكَ كَبِيْرًا ٨٧

illā
إِلَّا
ஆனால்
raḥmatan
رَحْمَةً
அருள்
min rabbika
مِّن رَّبِّكَۚ
உம் இறைவனுடைய
inna
إِنَّ
நிச்சயமாக
faḍlahu
فَضْلَهُۥ
அவனுடைய அருள்
kāna
كَانَ
இருக்கிறது
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
kabīran
كَبِيرًا
மிகப் பெரிதாக
ஆனால், உங்கள் இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உங்கள்மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௭)
Tafseer
௮௮

قُلْ لَّىِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰٓى اَنْ يَّأْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا يَأْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيْرًا ٨٨

qul
قُل
கூறுவீராக
la-ini ij'tamaʿati
لَّئِنِ ٱجْتَمَعَتِ
ஒன்று சேர்ந்தால்
l-insu
ٱلْإِنسُ
மனிதர்கள்
wal-jinu
وَٱلْجِنُّ
இன்னும் ஜின்கள்
ʿalā
عَلَىٰٓ
மீது
an yatū
أَن يَأْتُوا۟
அவர்கள் வர
bimith'li hādhā
بِمِثْلِ هَٰذَا
போன்றதைக் கொண்டு/இது
l-qur'āni
ٱلْقُرْءَانِ
குர்ஆன்
lā yatūna
لَا يَأْتُونَ
வர மாட்டார்கள்
bimith'lihi
بِمِثْلِهِۦ
இது போன்றதைக் கொண்டு
walaw kāna
وَلَوْ كَانَ
இருந்தாலும் சரியே
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
சிலருக்கு
ẓahīran
ظَهِيرًا
உதவியாளராக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௮)
Tafseer
௮௯

وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِيْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍۖ فَاَبٰىٓ اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ٨٩

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ṣarrafnā
صَرَّفْنَا
விவரித்தோம்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
fī hādhā
فِى هَٰذَا
இதில்
l-qur'āni
ٱلْقُرْءَانِ
குர்ஆன்
min kulli mathalin
مِن كُلِّ مَثَلٍ
எல்லா உதாரணங்களையும்
fa-abā
فَأَبَىٰٓ
மறுத்தனர்
aktharu
أَكْثَرُ
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
illā
إِلَّا
தவிர
kufūran
كُفُورًا
நிராகரிப்பதை
இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நிராகரிக்காமல் இருக்கவில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௯)
Tafseer
௯௦

وَقَالُوْا لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰى تَفْجُرَ لَنَا مِنَ الْاَرْضِ يَنْۢبُوْعًاۙ ٩٠

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
lan nu'mina
لَن نُّؤْمِنَ
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
laka
لَكَ
உம்மை
ḥattā tafjura lanā
حَتَّىٰ تَفْجُرَ لَنَا
வரை/நீர் பிளந்து விடுவீர்/எங்களுக்கு
mina l-arḍi
مِنَ ٱلْأَرْضِ
பூமியில்
yanbūʿan
يَنۢبُوعًا
ஓர் ஊற்றை
(நபியே!) "இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண் தோன்றினாலன்றி நாம் உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௦)
Tafseer