يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍۢ بِاِمَامِهِمْۚ فَمَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَاُولٰۤىِٕكَ يَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا ٧١
- yawma
- يَوْمَ
- நாள்
- nadʿū
- نَدْعُوا۟
- நாம் அழைப்போம்
- kulla
- كُلَّ
- ஒவ்வொரு
- unāsin
- أُنَاسٍۭ
- மனிதன்
- bi-imāmihim
- بِإِمَٰمِهِمْۖ
- அவர்களின் தலைவர்களுடன்
- faman
- فَمَنْ
- எவர்(கள்)
- ūtiya
- أُوتِىَ
- கொடுக்கப்பட்டார்(கள்)
- kitābahu
- كِتَٰبَهُۥ
- தமது புத்தகத்தை
- biyamīnihi
- بِيَمِينِهِۦ
- தமது வலக்கையில்
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அத்தகையவர்கள்
- yaqraūna
- يَقْرَءُونَ
- வாசிப்பார்கள்
- kitābahum
- كِتَٰبَهُمْ
- தங்கள் புத்தகத்தை
- walā yuẓ'lamūna
- وَلَا يُظْلَمُونَ
- இன்னும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
- fatīlan
- فَتِيلًا
- ஒரு நூல் அளவு
ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப் பட்டால் அவர்கள் தங்களுடைய அ(த் தினசரி குறிப்பு)ப் புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் அணுவளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௧)Tafseer
وَمَنْ كَانَ فِيْ هٰذِهٖٓ اَعْمٰى فَهُوَ فِى الْاٰخِرَةِ اَعْمٰى وَاَضَلُّ سَبِيْلًا ٧٢
- waman
- وَمَن
- எவர்
- kāna
- كَانَ
- இருந்தார்
- fī hādhihi
- فِى هَٰذِهِۦٓ
- இம்மையில்
- aʿmā
- أَعْمَىٰ
- குருடராக
- fahuwa fī l-ākhirati
- فَهُوَ فِى ٱلْءَاخِرَةِ
- அவர் மறுமையில்
- aʿmā
- أَعْمَىٰ
- குருடர்
- wa-aḍallu
- وَأَضَلُّ
- இன்னும் மிக வழிகெட்டவர்
- sabīlan
- سَبِيلًا
- பாதையால்
எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தப்பி விடுவார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௨)Tafseer
وَاِنْ كَادُوْا لَيَفْتِنُوْنَكَ عَنِ الَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهٗۖ وَاِذًا لَّاتَّخَذُوْكَ خَلِيْلًا ٧٣
- wa-in kādū
- وَإِن كَادُوا۟
- நிச்சயமாக நெருங்கி விட்டனர்
- layaftinūnaka
- لَيَفْتِنُونَكَ
- அவர்கள் திருப்பிவிட/உம்மை
- ʿani
- عَنِ
- விட்டு
- alladhī
- ٱلَّذِىٓ
- எதை
- awḥaynā
- أَوْحَيْنَآ
- நாம் வஹீ அறிவித்தோம்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- litaftariya
- لِتَفْتَرِىَ
- ஏனெனில் நீர் இட்டுக்கட்டுவதற்காக
- ʿalaynā
- عَلَيْنَا
- நம் மீது
- ghayrahu
- غَيْرَهُۥۖ
- அது அல்லாததை
- wa-idhan
- وَإِذًا
- அப்போது
- la-ittakhadhūka
- لَّٱتَّخَذُوكَ
- எடுத்துக் கொண்டிருப்பார்கள்/உம்மை
- khalīlan
- خَلِيلًا
- உற்ற நண்பராக
நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அதல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௩)Tafseer
وَلَوْلَآ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَيْهِمْ شَيْـًٔا قَلِيْلًا ۙ ٧٤
- walawlā an thabbatnāka
- وَلَوْلَآ أَن ثَبَّتْنَٰكَ
- நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால்/உம்மை
- laqad kidtta
- لَقَدْ كِدتَّ
- நெருங்கி இருப்பீர்
- tarkanu
- تَرْكَنُ
- நீர் சாய்ந்துவிட
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்கள் பக்கம்
- shayan
- شَيْـًٔا
- ஓர் அளவு
- qalīlan
- قَلِيلًا
- கொஞ்சம்
உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௪)Tafseer
اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَيٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيْرًا ٧٥
- idhan
- إِذًا
- அப்போது
- la-adhaqnāka
- لَّأَذَقْنَٰكَ
- சுவைக்க வைத்திருப்போம்/உம்மை
- ḍiʿ'fa
- ضِعْفَ
- இரு மடங்கு தண்டனையையும்
- l-ḥayati
- ٱلْحَيَوٰةِ
- இவ்வாழ்க்கையில்
- waḍiʿ'fa
- وَضِعْفَ
- இன்னும் இரட்டிப்பு
- l-mamāti
- ٱلْمَمَاتِ
- மரணத்திற்குப் பின்
- thumma
- ثُمَّ
- பிறகு
- lā tajidu
- لَا تَجِدُ
- காணமாட்டீர்
- laka
- لَكَ
- உமக்கு
- ʿalaynā
- عَلَيْنَا
- நமக்கு எதிராக
- naṣīran
- نَصِيرًا
- உதவக்கூடியவரை
(அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௫)Tafseer
وَاِنْ كَادُوْا لَيَسْتَفِزُّوْنَكَ مِنَ الْاَرْضِ لِيُخْرِجُوْكَ مِنْهَا وَاِذًا لَّا يَلْبَثُوْنَ خِلٰفَكَ اِلَّا قَلِيْلًا ٧٦
- wa-in kādū
- وَإِن كَادُوا۟
- நிச்சயமாக முயற்சிக்கின்றனர்
- layastafizzūnaka
- لَيَسْتَفِزُّونَكَ
- அவர்கள் தூண்டிவிட/உம்மை
- mina l-arḍi
- مِنَ ٱلْأَرْضِ
- ஊரிலிருந்து
- liyukh'rijūka
- لِيُخْرِجُوكَ
- அவர்கள் வெளியேற்றுவதற்காக/உம்மை
- min'hā
- مِنْهَاۖ
- அதிலிருந்து
- wa-idhan lā yalbathūna
- وَإِذًا لَّا يَلْبَثُونَ
- அப்போது வசித்திருக்க மாட்டார்கள்
- khilāfaka
- خِلَٰفَكَ
- உமக்குப் பின்னால்
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- சொற்ப காலமே தவிர
(நபியே! உங்களுடைய) ஊரிலிருந்து உங்களுடைய காலைப் பெயர்த்து அதிலிருந்து உங்களை வெளிப்படுத்தி விடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அவ்வாறவர்கள் செய்திருந்தால் உங்களுக்குப் பின்னர் வெகு சொற்பநாள்களே அன்றி அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௬)Tafseer
سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيْلًا ࣖ ٧٧
- sunnata
- سُنَّةَ
- நடைமுறை
- man qad
- مَن قَدْ
- எவர்/திட்டமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- qablaka
- قَبْلَكَ
- உமக்கு முன்பு
- min rusulinā
- مِن رُّسُلِنَاۖ
- நம் தூதர்களில்
- walā tajidu
- وَلَا تَجِدُ
- நீர் காணமாட்டீர்
- lisunnatinā
- لِسُنَّتِنَا
- நம் நடைமுறையில்
- taḥwīlan
- تَحْوِيلًا
- மாற்றத்தை
உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நம்முடைய அந்த வழக்கத்தில் யாதொரு மாறுதலையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௭)Tafseer
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْفَجْرِۗ اِنَّ قُرْاٰنَ الْفَجْرِ كَانَ مَشْهُوْدًا ٧٨
- aqimi
- أَقِمِ
- நிலை நிறுத்துவீராக
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- lidulūki
- لِدُلُوكِ
- சாய்ந்ததிலிருந்து
- l-shamsi
- ٱلشَّمْسِ
- சூரியன்
- ilā ghasaqi
- إِلَىٰ غَسَقِ
- இருள் வரை
- al-layli
- ٱلَّيْلِ
- இரவின்
- waqur'āna
- وَقُرْءَانَ
- இன்னும் தொழுகை
- l-fajri
- ٱلْفَجْرِۖ
- ஃபஜ்ர் உடைய
- inna qur'āna
- إِنَّ قُرْءَانَ
- நிச்சயமாக தொழுகை
- l-fajri
- ٱلْفَجْرِ
- ஃபஜ்ர்
- kāna
- كَانَ
- இருக்கின்றது
- mashhūdan
- مَشْهُودًا
- வானவர்கள் கலந்து கொள்ளக்கூடியதாக
(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்துகொள்ளும் தொழுகையாகும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௮)Tafseer
وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَۖ عَسٰٓى اَنْ يَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا ٧٩
- wamina al-layli fatahajjad
- وَمِنَ ٱلَّيْلِ فَتَهَجَّدْ
- இரவில்/உறங்கி எழுந்து தொழுவீராக
- bihi
- بِهِۦ
- அதை (ஓதி)
- nāfilatan
- نَافِلَةً
- உபரியா(னதா)க
- laka
- لَّكَ
- உமக்கு
- ʿasā an yabʿathaka
- عَسَىٰٓ أَن يَبْعَثَكَ
- எழுப்புவான்/உம்மை
- rabbuka
- رَبُّكَ
- உம் இறைவன்
- maqāman maḥmūdan
- مَقَامًا مَّحْمُودًا
- இடத்தில்/மஹ்மூது
தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் "மகாமே மஹ்மூத்" என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௯)Tafseer
وَقُلْ رَّبِّ اَدْخِلْنِيْ مُدْخَلَ صِدْقٍ وَّاَخْرِجْنِيْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّيْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا ٨٠
- waqul
- وَقُل
- இன்னும் கூறுவீராக
- rabbi
- رَّبِّ
- என் இறைவா
- adkhil'nī
- أَدْخِلْنِى
- நுழையவை/என்னை
- mud'khala
- مُدْخَلَ
- நுழைவிடத்தில்
- ṣid'qin
- صِدْقٍ
- நல்லது
- wa-akhrij'nī
- وَأَخْرِجْنِى
- இன்னும் வெளியேற்று/என்னை
- mukh'raja
- مُخْرَجَ
- வெளியேறுமிடத்தில்
- ṣid'qin
- صِدْقٍ
- நல்லது
- wa-ij'ʿal lī
- وَٱجْعَل لِّى
- இன்னும் ஏற்படுத்து/எனக்கு
- min ladunka
- مِن لَّدُنكَ
- உன்னிடமிருந்து
- sul'ṭānan
- سُلْطَٰنًا
- ஓர் ஆதாரத்தை
- naṣīran
- نَّصِيرًا
- உதவக்கூடியதாக
அன்றி, "என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழைய வை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்தி வை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள்! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௦)Tafseer