اَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِيْ صُدُوْرِكُمْ ۚفَسَيَقُوْلُوْنَ مَنْ يُّعِيْدُنَاۗ قُلِ الَّذِيْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍۗ فَسَيُنْغِضُوْنَ اِلَيْكَ رُءُوْسَهُمْ وَيَقُوْلُوْنَ مَتٰى هُوَۗ قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَرِيْبًا ٥١
- aw
- أَوْ
- அல்லது
- khalqan
- خَلْقًا
- ஒரு படைப்பாக
- mimmā
- مِّمَّا
- உள்ளவற்றில்
- yakburu
- يَكْبُرُ
- பெரியதாக
- fī ṣudūrikum
- فِى صُدُورِكُمْۚ
- உங்கள் நெஞ்சங்களில்
- fasayaqūlūna
- فَسَيَقُولُونَ
- அவர்கள் கூறட்டும்
- man
- مَن
- யார்?
- yuʿīdunā
- يُعِيدُنَاۖ
- மீட்பார்/எங்களை
- quli
- قُلِ
- கூறுவீராக
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- faṭarakum
- فَطَرَكُمْ
- படைத்தான்/உங்களை
- awwala
- أَوَّلَ
- முதல்
- marratin
- مَرَّةٍۚ
- முறையாக
- fasayun'ghiḍūna
- فَسَيُنْغِضُونَ
- ஆகவே ஆட்டுவார்கள்
- ilayka
- إِلَيْكَ
- உம் பக்கம்
- ruūsahum
- رُءُوسَهُمْ
- தலைகளை/தங்கள்
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- பிறகு கூறுவார்கள்
- matā
- مَتَىٰ
- எப்போது
- huwa
- هُوَۖ
- அது
- qul
- قُلْ
- கூறுவீராக
- ʿasā
- عَسَىٰٓ
- கூடும்
- an yakūna
- أَن يَكُونَ
- இருக்க
- qarīban
- قَرِيبًا
- சமீபமாக
அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாகவாகிலும் ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் "எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?" என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)" என்று கூறுங்கள். அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து "அந்நாள் எப்பொழுது (வரும்)?" என்று கேட்பார்கள். அதற்கு நீங்கள் (அவர்களை நோக்கி "அது தூரத்தில் இல்லை) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்" என்று கூறுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௧)Tafseer
يَوْمَ يَدْعُوْكُمْ فَتَسْتَجِيْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِيْلًا ࣖ ٥٢
- yawma yadʿūkum
- يَوْمَ يَدْعُوكُمْ
- நாள்/அழைப்பான்/உங்களை
- fatastajībūna
- فَتَسْتَجِيبُونَ
- பதில் அளிப்பீர்கள்
- biḥamdihi
- بِحَمْدِهِۦ
- புகழ்ந்து அவனுடைய
- wataẓunnūna
- وَتَظُنُّونَ
- இன்னும் எண்ணுவீர்கள்
- in labith'tum
- إِن لَّبِثْتُمْ
- நீங்கள் தங்கவில்லை
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- தவிர/சொற்பமாக
(இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்துகொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப (நேர)மே அன்றி தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௨)Tafseer
وَقُلْ لِّعِبَادِيْ يَقُوْلُوا الَّتِيْ هِيَ اَحْسَنُۗ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْۗ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا ٥٣
- waqul
- وَقُل
- கூறுவீராக
- liʿibādī
- لِّعِبَادِى
- என் அடியார்களுக்கு
- yaqūlū
- يَقُولُوا۟
- அவர்கள் கூறவும்
- allatī
- ٱلَّتِى
- எது
- hiya
- هِىَ
- அது
- aḥsanu
- أَحْسَنُۚ
- மிக அழகியது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-shayṭāna
- ٱلشَّيْطَٰنَ
- ஷைத்தான்
- yanzaghu
- يَنزَغُ
- குழப்பம், கெடுதி செய்வான்
- baynahum
- بَيْنَهُمْۚ
- அவர்களுக்கிடையில்
- inna l-shayṭāna
- إِنَّ ٱلشَّيْطَٰنَ
- நிச்சயமாக ஷைத்தான்
- kāna
- كَانَ
- இருக்கின்றான்
- lil'insāni
- لِلْإِنسَٰنِ
- மனிதனுக்கு
- ʿaduwwan
- عَدُوًّا
- எதிரியாக
- mubīnan
- مُّبِينًا
- தெளிவான
(நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௩)Tafseer
رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْ اِنْ يَّشَأْ يَرْحَمْكُمْ اَوْ اِنْ يَّشَأْ يُعَذِّبْكُمْۗ وَمَآ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ وَكِيْلًا ٥٤
- rabbukum
- رَّبُّكُمْ
- உங்கள் இறைவன்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- bikum
- بِكُمْۖ
- உங்களை
- in yasha
- إِن يَشَأْ
- அவன் நாடினால்
- yarḥamkum aw
- يَرْحَمْكُمْ أَوْ
- அருள் புரிவான்/உங்களுக்கு/அல்லது
- in yasha
- إِن يَشَأْ
- அவன் நாடினால்
- yuʿadhib'kum
- يُعَذِّبْكُمْۚ
- வேதனை செய்வான்/ உங்களை
- wamā arsalnāka
- وَمَآ أَرْسَلْنَٰكَ
- உம்மை நாம் அனுப்பவில்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- wakīlan
- وَكِيلًا
- பொறுப்பாளராக
(மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) உங்களை அவர்களுக்குப் பொறுப்பாளியாக நாம் அனுப்பவில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௪)Tafseer
وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيّٖنَ عَلٰى بَعْضٍ وَّاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا ٥٥
- warabbuka
- وَرَبُّكَ
- உம் இறைவன்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- biman
- بِمَن
- எவர்களை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۗ
- இன்னும் பூமி
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- faḍḍalnā
- فَضَّلْنَا
- மேன்மைப்படுத்தினோம்
- baʿḍa l-nabiyīna
- بَعْضَ ٱلنَّبِيِّۦنَ
- சிலரை/நபிமார்களில்
- ʿalā baʿḍin
- عَلَىٰ بَعْضٍۖ
- சிலர் மீது
- waātaynā
- وَءَاتَيْنَا
- இன்னும் கொடுத்தோம்
- dāwūda zabūran
- دَاوُۥدَ زَبُورًا
- தாவூதுக்கு/ஜபூரை
வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கின்றது என்பதையும் உங்கள் இறைவன் நன்கறிவான். (நபியே! உங்களது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு "ஜபூர்" என்னும் வேதத்தைக் கொடுத்தோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௫)Tafseer
قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا يَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِيْلًا ٥٦
- quli
- قُلِ
- கூறுவீராக
- id'ʿū
- ٱدْعُوا۟
- அழையுங்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- zaʿamtum
- زَعَمْتُم
- கூறினீர்கள்
- min dūnihi
- مِّن دُونِهِۦ
- அவனையன்றி
- falā yamlikūna
- فَلَا يَمْلِكُونَ
- உரிமை, ஆற்றல் பெற மாட்டார்கள்
- kashfa
- كَشْفَ
- நீக்குவதற்கு
- l-ḍuri
- ٱلضُّرِّ
- துன்பத்தை
- ʿankum
- عَنكُمْ
- உங்களை விட்டு
- walā taḥwīlan
- وَلَا تَحْوِيلًا
- இன்னும் திருப்புவதற்கும்
(நபியே! இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள் (உங்கள் கஷ்டங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறழைத்தால்) அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதனைத்) தட்டிவிடவோ சக்தியற்றவை (என்பதை) அறிந்து கொள்வீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௬)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ يَدْعُوْنَ يَبْتَغُوْنَ اِلٰى رَبِّهِمُ الْوَسِيْلَةَ اَيُّهُمْ اَقْرَبُ وَيَرْجُوْنَ رَحْمَتَهٗ وَيَخَافُوْنَ عَذَابَهٗۗ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا ٥٧
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- yadʿūna
- يَدْعُونَ
- பிரார்த்திக்கிறார்கள்
- yabtaghūna
- يَبْتَغُونَ
- தேடுகின்றனர்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- rabbihimu
- رَبِّهِمُ
- தங்கள் இறைவன்
- l-wasīlata
- ٱلْوَسِيلَةَ
- நன்மையை
- ayyuhum
- أَيُّهُمْ
- தங்களில் யார்
- aqrabu
- أَقْرَبُ
- மிக நெருங்கியவராக
- wayarjūna
- وَيَرْجُونَ
- இன்னும் ஆதரவு வைக்கின்றனர்
- raḥmatahu
- رَحْمَتَهُۥ
- அவனுடையஅருளை
- wayakhāfūna
- وَيَخَافُونَ
- இன்னும் பயப்படுகின்றனர்
- ʿadhābahu
- عَذَابَهُۥٓۚ
- வேதனையை/அவனுடைய
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- ʿadhāba
- عَذَابَ
- வேதனை
- rabbika
- رَبِّكَ
- உம் இறைவனின்
- kāna maḥdhūran
- كَانَ مَحْذُورًا
- இருக்கின்றது/பயப்படவேண்டியதாக
இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கின்றார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்க மானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர் பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கின்றார்கள். ஏனென்றால், நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக் கூடியதே! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௭)Tafseer
وَاِنْ مِّنْ قَرْيَةٍ اِلَّا نَحْنُ مُهْلِكُوْهَا قَبْلَ يَوْمِ الْقِيٰمَةِ اَوْ مُعَذِّبُوْهَا عَذَابًا شَدِيْدًاۗ كَانَ ذٰلِكَ فىِ الْكِتٰبِ مَسْطُوْرًا ٥٨
- wa-in min
- وَإِن مِّن
- அறவே இல்லை
- qaryatin
- قَرْيَةٍ
- ஊர்
- illā
- إِلَّا
- தவிர
- naḥnu
- نَحْنُ
- நாம்
- muh'likūhā
- مُهْلِكُوهَا
- அதை அழிப்பவர்களாக
- qabla
- قَبْلَ
- முன்பு
- yawmi l-qiyāmati
- يَوْمِ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளுக்கு
- aw
- أَوْ
- அல்லது
- muʿadhibūhā
- مُعَذِّبُوهَا
- வேதனை செய்பவர்களாக/அதை
- ʿadhāban
- عَذَابًا
- வேதனை
- shadīdan
- شَدِيدًاۚ
- கடுமையானது
- kāna
- كَانَ
- இருக்கின்றது
- dhālika
- ذَٰلِكَ
- இது
- fī l-kitābi
- فِى ٱلْكِتَٰبِ
- புத்தகத்தில்
- masṭūran
- مَسْطُورًا
- எழுதப்பட்டதாக
(அநியாயக்காரர்கள் வசிக்கும்) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்துவிடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளி"ல் வரையப்பட்டுவிட்டது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௮)Tafseer
وَمَا مَنَعَنَآ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّآ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَۗ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَاۗ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا ٥٩
- wamā manaʿanā
- وَمَا مَنَعَنَآ
- தடுக்கவில்லை/நம்மை
- an nur'sila
- أَن نُّرْسِلَ
- நாம் அனுப்பிவைக்க
- bil-āyāti
- بِٱلْءَايَٰتِ
- அத்தாட்சிகளை
- illā
- إِلَّآ
- தவிர
- an kadhaba
- أَن كَذَّبَ
- பொய்ப்பித்தார்(கள்)
- bihā
- بِهَا
- அவற்றை
- l-awalūna
- ٱلْأَوَّلُونَۚ
- முன்னோர்
- waātaynā
- وَءَاتَيْنَا
- இன்னும் கொடுத்தோம்
- thamūda
- ثَمُودَ
- ஸமூதுக்கு
- l-nāqata
- ٱلنَّاقَةَ
- பெண் ஒட்டகத்தை
- mub'ṣiratan
- مُبْصِرَةً
- தெளிவான அத்தாட்சியாக
- faẓalamū
- فَظَلَمُوا۟
- தீங்கிழைத்தனர்
- bihā
- بِهَاۚ
- அதற்கு
- wamā nur'silu
- وَمَا نُرْسِلُ
- அனுப்ப மாட்டோம்
- bil-āyāti
- بِٱلْءَايَٰتِ
- அத்தாட்சிகளை
- illā takhwīfan
- إِلَّا تَخْوِيفًا
- தவிர/ பயமுறுத்தலாகவே
(நாம் அனுப்பிய அத்தாட்சிகளை) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த அத்தாட்சிகளையும் அவர்களே) பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பி வைக்க வேறொன்றும் தடையாக இல்லை. (இதற்கு முன்னர்) "ஸமூது" என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) இத்தகைய அத்தாட்சிகளையெல்லாம் (அவர்களுக்குப்) பயமுறுத்தும் பொருட்டேயன்றி நாம் அனுப்புவதில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௯)Tafseer
وَاِذْ قُلْنَا لَكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِۗ وَمَا جَعَلْنَا الرُّءْيَا الَّتِيْٓ اَرَيْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِى الْقُرْاٰنِ ۗ وَنُخَوِّفُهُمْۙ فَمَا يَزِيْدُهُمْ اِلَّا طُغْيَانًا كَبِيْرًا ࣖ ٦٠
- wa-idh qul'nā
- وَإِذْ قُلْنَا
- நாம் கூறிய சமயம்
- laka
- لَكَ
- உமக்கு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவன்
- aḥāṭa
- أَحَاطَ
- சூழ்ந்து கொண்டான்
- bil-nāsi
- بِٱلنَّاسِۚ
- மனிதர்களை
- wamā jaʿalnā
- وَمَا جَعَلْنَا
- இன்னும் நாம்ஆக்கவில்லை
- l-ru'yā allatī
- ٱلرُّءْيَا ٱلَّتِىٓ
- காட்சியை/எது
- araynāka
- أَرَيْنَٰكَ
- உமக்குகாண்பித்தோம்
- illā fit'natan
- إِلَّا فِتْنَةً
- தவிர/சோதனையாக
- lilnnāsi
- لِّلنَّاسِ
- மனிதர்களுக்கு
- wal-shajarata
- وَٱلشَّجَرَةَ
- இன்னும் மரத்தை
- l-malʿūnata
- ٱلْمَلْعُونَةَ
- சபிக்கப்பட்டது
- fī l-qur'āni
- فِى ٱلْقُرْءَانِۚ
- குர்ஆனில்
- wanukhawwifuhum
- وَنُخَوِّفُهُمْ
- இன்னும் பயமுறுத்துகிறோம்/அவர்களை
- famā
- فَمَا
- அதிகப்படுத்துவ தில்லை
- yazīduhum
- يَزِيدُهُمْ
- அதிகப்படுத்துவ தில்லை அவர்களுக்கு
- illā ṭugh'yānan
- إِلَّا طُغْيَٰنًا
- தவிர/அட்டூழியத்தை
- kabīran
- كَبِيرًا
- பெரியது
(நபியே!) "உங்கள் இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்து கொண்டான். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது)" என்று நாம் உங்களுக்குக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காக வேயன்றி வேறில்லை. (நபியே! நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களுக்குப் பயமுறுத்துவது பின்னும் (பின்னும்) அவர்களுடைய பெரும் அட்டூழியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௦)Tafseer