وَلَقَدْ صَرَّفْنَا فِيْ هٰذَا الْقُرْاٰنِ لِيَذَّكَّرُوْاۗ وَمَا يَزِيْدُهُمْ اِلَّا نُفُوْرًا ٤١
- walaqad ṣarrafnā
- وَلَقَدْ صَرَّفْنَا
- திட்டமாக விவரித்தோம்
- fī hādhā l-qur'āni
- فِى هَٰذَا ٱلْقُرْءَانِ
- இந்த குர்ஆனில்
- liyadhakkarū
- لِيَذَّكَّرُوا۟
- அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
- wamā yazīduhum
- وَمَا يَزِيدُهُمْ
- அதிகப்படுத்தவில்லை/அவர்களுக்கு
- illā
- إِلَّا
- தவிர
- nufūran
- نُفُورًا
- வெறுப்பை
இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையேயன்றி அதிகப்படுத்தவில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௧)Tafseer
قُلْ لَّوْ كَانَ مَعَهٗ ٓ اٰلِهَةٌ كَمَا يَقُوْلُوْنَ اِذًا لَّابْتَغَوْا اِلٰى ذِى الْعَرْشِ سَبِيْلًا ٤٢
- qul
- قُل
- கூறுவீராக
- law kāna
- لَّوْ كَانَ
- இருந்திருந்தால்
- maʿahu
- مَعَهُۥٓ
- அவனுடன்
- ālihatun
- ءَالِهَةٌ
- பல கடவுள்கள்
- kamā yaqūlūna
- كَمَا يَقُولُونَ
- அவர்கள் கூறுவது போல்
- idhan
- إِذًا
- அப்போது
- la-ib'taghaw
- لَّٱبْتَغَوْا۟
- தேடியிருப்பார்கள்
- ilā
- إِلَىٰ
- பக்கம்
- dhī l-ʿarshi
- ذِى ٱلْعَرْشِ
- அர்ஷ் உடையவன்
- sabīlan
- سَبِيلًا
- ஒரு வழியை
(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௨)Tafseer
سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَقُوْلُوْنَ عُلُوًّا كَبِيْرًا ٤٣
- sub'ḥānahu
- سُبْحَٰنَهُۥ
- அவன் மிகப் பரிசுத்தமானவன்
- wataʿālā
- وَتَعَٰلَىٰ
- இன்னும் உயர்ந்துவிட்டான்
- ʿammā
- عَمَّا
- எதை விட்டு
- yaqūlūna
- يَقُولُونَ
- கூறுகிறார்கள்
- ʿuluwwan
- عُلُوًّا
- உயர்வாக
- kabīran
- كَبِيرًا
- மிகப் பெரியது
அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறும் கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௩)Tafseer
تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّۗ وَاِنْ مِّنْ شَيْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْۗ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا ٤٤
- tusabbiḥu
- تُسَبِّحُ
- துதிக்கின்றன(ர்)
- lahu
- لَهُ
- அவனையே
- l-samāwātu
- ٱلسَّمَٰوَٰتُ
- வானங்கள்
- l-sabʿu
- ٱلسَّبْعُ
- ஏழு
- wal-arḍu
- وَٱلْأَرْضُ
- இன்னும் பூமி
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- fīhinna
- فِيهِنَّۚ
- இவற்றில்
- wa-in
- وَإِن
- இல்லை
- min shayin
- مِّن شَىْءٍ
- எந்த ஒரு பொருளும்
- illā
- إِلَّا
- தவிர
- yusabbiḥu
- يُسَبِّحُ
- துதிக்கிறது
- biḥamdihi
- بِحَمْدِهِۦ
- அவனைப் புகழ்ந்து
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- lā tafqahūna
- لَّا تَفْقَهُونَ
- அறிய மாட்டீர்கள்
- tasbīḥahum
- تَسْبِيحَهُمْۗ
- அவர்களின் துதியை
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- இருக்கிறான்
- ḥalīman
- حَلِيمًا
- மகா சகிப்பாளனாக
- ghafūran
- غَفُورًا
- மகா மன்னிப்பாளனாக
ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௪)Tafseer
وَاِذَا قَرَأْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًاۙ ٤٥
- wa-idhā qarata
- وَإِذَا قَرَأْتَ
- நீர் ஓதினால்
- l-qur'āna
- ٱلْقُرْءَانَ
- குர்ஆனை
- jaʿalnā
- جَعَلْنَا
- ஆக்கிவிடுவோம்
- baynaka
- بَيْنَكَ
- உமக்கு இடையில்
- wabayna
- وَبَيْنَ
- இன்னும் இடையில்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- மறுமையை
- ḥijāban
- حِجَابًا
- ஒரு திரையை
- mastūran
- مَّسْتُورًا
- மறைக்கப்பட்டது
(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உங்களுக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௫)Tafseer
وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًاۗ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا ٤٦
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- ஆக்கிவிடுவோம்
- ʿalā qulūbihim
- عَلَىٰ قُلُوبِهِمْ
- அவர்களின் உள்ளங்கள் மீது
- akinnatan
- أَكِنَّةً
- மூடிகளை
- an yafqahūhu
- أَن يَفْقَهُوهُ
- அவர்கள் விளங்குவதற்கு/அதை
- wafī ādhānihim waqran
- وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًاۚ
- இன்னும் காதுகளில்/அவர்களுடைய/கனத்தை
- wa-idhā dhakarta
- وَإِذَا ذَكَرْتَ
- நீர் நினைவுகூர்ந்தால்
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவனை
- fī l-qur'āni
- فِى ٱلْقُرْءَانِ
- குர்ஆனில்
- waḥdahu
- وَحْدَهُۥ
- அவனை மட்டும்
- wallaw
- وَلَّوْا۟
- திரும்புகின்றனர்
- ʿalā
- عَلَىٰٓ
- மீது
- adbārihim
- أَدْبَٰرِهِمْ
- தங்கள் பின்புறங்கள்
- nufūran
- نُفُورًا
- வெறுத்து
அன்றி, அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதனை விளங்கிக்கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திருக்குர்ஆனில் உங்கள் இறைவன் ஒருவனைப் பற்றியே நீங்கள் கூறிக்கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௬)Tafseer
نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖٓ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ٤٧
- naḥnu
- نَّحْنُ
- நாம்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவர்கள்
- bimā yastamiʿūna bihi
- بِمَا يَسْتَمِعُونَ بِهِۦٓ
- எதற்காக/செவிமடுக்கின்றனர்/அதை
- idh yastamiʿūna
- إِذْ يَسْتَمِعُونَ
- அவர்கள் செவிமடுக்கும் போது
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- wa-idh
- وَإِذْ
- இன்னும் /போது
- hum
- هُمْ
- அவர்கள்
- najwā
- نَجْوَىٰٓ
- தனித்து பேசுபவர்கள்
- idh yaqūlu
- إِذْ يَقُولُ
- கூறும் போது
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
- in tattabiʿūna
- إِن تَتَّبِعُونَ
- நீங்கள் பின்பற்றவில்லை
- illā rajulan
- إِلَّا رَجُلًا
- ஓர் ஆடவரை/தவிர
- masḥūran
- مَّسْحُورًا
- (மனித இனத்தை சேர்ந்தவர்,) உண்ணவும் குடிக்கவும் செய்பவர்
அவர்கள் உங்களுக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உங்களைப் பற்றி) இரகசியமாகப் பேசிக் கொண்டால், "சூனியத்திற்குள்ளான மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை" என்று (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்). ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௭)Tafseer
اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا ٤٨
- unẓur
- ٱنظُرْ
- கவனிப்பீராக
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- ḍarabū
- ضَرَبُوا۟
- விவரித்தார்கள்
- laka
- لَكَ
- உமக்கு
- l-amthāla
- ٱلْأَمْثَالَ
- தன்மைகளை
- faḍallū
- فَضَلُّوا۟
- ஆகவே வழிகெட்டனர்
- falā yastaṭīʿūna
- فَلَا يَسْتَطِيعُونَ
- இயலமாட்டார்கள்
- sabīlan
- سَبِيلًا
- வழி(பெற)
(நபியே!) உங்களுக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீங்கள் கவனியுங்கள். இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௮)Tafseer
وَقَالُوْٓا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا ٤٩
- waqālū
- وَقَالُوٓا۟
- கூறுகிறார்கள்
- a-idhā kunnā
- أَءِذَا كُنَّا
- நாங்கள் ஆகிவிட்டால்?
- ʿiẓāman
- عِظَٰمًا
- எலும்புகளாக
- warufātan
- وَرُفَٰتًا
- இன்னும் மக்கியவர்களாக
- a-innā
- أَءِنَّا
- ?/நிச்சயமாக நாம்
- lamabʿūthūna
- لَمَبْعُوثُونَ
- எழுப்பப்படுவோம்
- khalqan jadīdan
- خَلْقًا جَدِيدًا
- படைப்பாக/புதிய
"நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?" என்று அவர்கள் கேட்கிறார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௯)Tafseer
۞ قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًاۙ ٥٠
- qul
- قُلْ
- கூறுவீராக
- kūnū
- كُونُوا۟
- ஆகிவிடுங்கள்
- ḥijāratan
- حِجَارَةً
- கல்லாக
- aw ḥadīdan
- أَوْ حَدِيدًا
- அல்லது இரும்பாக
(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௦)Tafseer