Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 3

Al-Isra

(al-ʾIsrāʾ)

௨௧

اُنْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍۗ وَلَلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِيْلًا ٢١

unẓur
ٱنظُرْ
கவனிப்பீராக
kayfa
كَيْفَ
எப்படி
faḍḍalnā
فَضَّلْنَا
மேன்மையாக்கினோம்
baʿḍahum
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
ʿalā
عَلَىٰ
விட
baʿḍin
بَعْضٍۚ
சிலரை
walalākhiratu
وَلَلْءَاخِرَةُ
மறுமைதான்
akbaru
أَكْبَرُ
மிகப் பெரியது
darajātin
دَرَجَٰتٍ
பதவிகளால்
wa-akbaru
وَأَكْبَرُ
இன்னும் மிகப் பெரியது
tafḍīlan
تَفْضِيلًا
மேன்மையால்
(நபியே!) சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை, நீங்கள் கவனித்துப் பாருங்கள்! மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் எவ்வளவோ பெரிது; சிறப்பிப்பதாலும் எவ்வளவோ பெரிது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௧)
Tafseer
௨௨

لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا ࣖ ٢٢

lā tajʿal
لَّا تَجْعَلْ
ஆக்காதீர்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَ
வேறு
fataqʿuda
فَتَقْعُدَ
அமர்ந்து விடுவீர்
madhmūman
مَذْمُومًا
இகழப்பட்டவராக
makhdhūlan
مَّخْذُولًا
கைவிடப்பட்டவராக
(நபியே!) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற் குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௨)
Tafseer
௨௩

۞ وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْٓا اِلَّآ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسٰنًاۗ اِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَآ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَآ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا ٢٣

waqaḍā
وَقَضَىٰ
கட்டளையிட்டு இருக்கின்றான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
allā taʿbudū
أَلَّا تَعْبُدُوٓا۟
வணங்காதீர்கள் என்று
illā iyyāhu
إِلَّآ إِيَّاهُ
அவனைத் தவிர
wabil-wālidayni
وَبِٱلْوَٰلِدَيْنِ
இன்னும் பெற்றோருக்கு
iḥ'sānan
إِحْسَٰنًاۚ
நன்மை புரியுங்கள்
immā yablughanna
إِمَّا يَبْلُغَنَّ
நிச்சயமாக அடைந்தால்
ʿindaka
عِندَكَ
உன்னிடம்
l-kibara
ٱلْكِبَرَ
முதுமையை
aḥaduhumā
أَحَدُهُمَآ
அவ்விருவர்களில் ஒருவர்
aw
أَوْ
அல்லது
kilāhumā
كِلَاهُمَا
அவர்கள் இருவரும்
falā taqul
فَلَا تَقُل
சொல்லாதே!
lahumā
لَّهُمَآ
அவ்விருவரையும்
uffin
أُفٍّ
“சீ”
walā
وَلَا
இன்னும் வெருட்டாதே!
tanharhumā
تَنْهَرْهُمَا
இன்னும் வெருட்டாதே! அவ்விருவரை
waqul
وَقُل
இன்னும் சொல்!
lahumā
لَّهُمَا
அவ்விருவருக்கும்
qawlan
قَوْلًا
சொல்லை
karīman
كَرِيمًا
மரியாதையானது
(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௩)
Tafseer
௨௪

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِيْ صَغِيْرًاۗ ٢٤

wa-ikh'fiḍ
وَٱخْفِضْ
இன்னும் தாழ்த்து
lahumā
لَهُمَا
அவர்களுக்கு முன்
janāḥa l-dhuli
جَنَاحَ ٱلذُّلِّ
இறக்கையை/ பணிவின்
mina l-raḥmati
مِنَ ٱلرَّحْمَةِ
கருணையுடன்
waqul
وَقُل
இன்னும் கூறு!
rabbi
رَّبِّ
என் இறைவா
ir'ḥamhumā
ٱرْحَمْهُمَا
நீயும் கருணை புரி!/அவ்விருவருக்கு
kamā rabbayānī
كَمَا رَبَّيَانِى
அவர்கள் வளர்த்தவாறே/என்னை
ṣaghīran
صَغِيرًا
சிறியவனாக
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௪)
Tafseer
௨௫

رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِيْ نُفُوْسِكُمْ ۗاِنْ تَكُوْنُوْا صٰلِحِيْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِيْنَ غَفُوْرًا ٢٥

rabbukum
رَّبُّكُمْ
உங்கள் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā
بِمَا
எதை
fī nufūsikum
فِى نُفُوسِكُمْۚ
உங்கள் மனங்களில்
in takūnū
إِن تَكُونُوا۟
நீங்கள் இருந்தால்
ṣāliḥīna
صَٰلِحِينَ
நல்லவர்களாக
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
lil'awwābīna
لِلْأَوَّٰبِينَ
மீளுகிறவர்களுக்கு
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் மிக்க நன்கறிவான். நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௫)
Tafseer
௨௬

وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا ٢٦

waāti
وَءَاتِ
இன்னும் கொடு!
dhā l-qur'bā
ذَا ٱلْقُرْبَىٰ
உறவினருக்கு
ḥaqqahu
حَقَّهُۥ
அவருடைய உரிமையை
wal-mis'kīna
وَٱلْمِسْكِينَ
இன்னும் ஏழைக்கு
wa-ib'na l-sabīli
وَٱبْنَ ٱلسَّبِيلِ
இன்னும் வழிப்போக்கருக்கு
walā tubadhir
وَلَا تُبَذِّرْ
இன்னும் மிதமிஞ்சி செலவழிக்காதே!
tabdhīran
تَبْذِيرًا
மித மிஞ்சி, மிக வீணாக செலவழித்தல்
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர் களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௬)
Tafseer
௨௭

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْٓا اِخْوَانَ الشَّيٰطِيْنِ ۗوَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا ٢٧

inna l-mubadhirīna
إِنَّ ٱلْمُبَذِّرِينَ
நிச்சயமாக மிதமிஞ்சி செலவழிப்பவர்கள்
kānū
كَانُوٓا۟
இருக்கின்றனர்
ikh'wāna
إِخْوَٰنَ
சகோதரர்களாக
l-shayāṭīni
ٱلشَّيَٰطِينِۖ
ஷைத்தான்களின்
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கின்றான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
lirabbihi
لِرَبِّهِۦ
தன் இறைவனுக்கு
kafūran
كَفُورًا
நன்றி கெட்டவனாக
ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௭)
Tafseer
௨௮

وَاِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاۤءَ رَحْمَةٍ مِّنْ رَّبِّكَ تَرْجُوْهَا فَقُلْ لَّهُمْ قَوْلًا مَّيْسُوْرًا ٢٨

wa-immā tuʿ'riḍanna
وَإِمَّا تُعْرِضَنَّ
நீ புறக்கணித்தால்
ʿanhumu
عَنْهُمُ
அவர்களை
ib'tighāa
ٱبْتِغَآءَ
நாடி
raḥmatin
رَحْمَةٍ
ஓர் அருளை
min
مِّن
இருந்து
rabbika
رَّبِّكَ
உம் இறைவன்
tarjūhā
تَرْجُوهَا
ஆதரவு வைத்தவனாக/ அதை
faqul
فَقُل
ஆகவே சொல்
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
qawlan
قَوْلًا
சொல்லை
maysūran
مَّيْسُورًا
மென்மையானது
(நபியே! உங்களிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீங்கள் உங்கள் இறைவனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உங்களிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீங்கள் புறக்கணிக்கும்படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்கள்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௮)
Tafseer
௨௯

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُوْلَةً اِلٰى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا ٢٩

walā tajʿal
وَلَا تَجْعَلْ
ஆக்காதே
yadaka
يَدَكَ
உனது கையை
maghlūlatan
مَغْلُولَةً
விலங்கிடப்பட்டதாக
ilā ʿunuqika
إِلَىٰ عُنُقِكَ
உன் கழுத்தில்
walā tabsuṭ'hā
وَلَا تَبْسُطْهَا
இன்னும் விரிக்காதே/அதை
kulla l-basṭi
كُلَّ ٱلْبَسْطِ
முற்றிலும் விரித்ததாக
fataqʿuda
فَتَقْعُدَ
அதனால் தங்கிவிடுவாய்
malūman
مَلُومًا
பழிக்கப்பட்டவராக
maḥsūran
مَّحْسُورًا
முடக்கப்பட்டவராக
(உங்களுடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உங்களுடைய கையைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! அன்றி, (உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உங்களுடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்கள்! அதனால் நீங்கள் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௯)
Tafseer
௩௦

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۗاِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًاۢ بَصِيْرًا ࣖ ٣٠

inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
yabsuṭu
يَبْسُطُ
விரிவாக்குகின்றான்
l-riz'qa
ٱلرِّزْقَ
வாழ்வாதாரத்தை
liman yashāu
لِمَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
wayaqdiru
وَيَقْدِرُۚ
இன்னும் அளவாகக் கொடுக்கின்றான்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
biʿibādihi
بِعِبَادِهِۦ
தன் அடியார்களை
khabīran
خَبِيرًۢا
ஆழ்ந்தறிபவனாக
baṣīran
بَصِيرًا
உற்று நோக்குபவனாக
நிச்சயமாக உங்கள் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்தும்) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், செயலை உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்கும் தக்கவாறு கொடுக்கிறான்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௦)
Tafseer