وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَاۤءَهٗ بِالْخَيْرِۗ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا ١١
- wayadʿu
- وَيَدْعُ
- பிரார்த்திக்கிறான்
- l-insānu bil-shari
- ٱلْإِنسَٰنُ بِٱلشَّرِّ
- மனிதன்/தீமைக்கு
- duʿāahu
- دُعَآءَهُۥ
- அவன் பிரார்த்திப்பதைப் (போலவே)
- bil-khayri
- بِٱلْخَيْرِۖ
- நன்மைக்கு
- wakāna
- وَكَانَ
- இன்னும் இருக்கின்றான்
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- மனிதன்
- ʿajūlan
- عَجُولًا
- அவசரக்காரனாக
மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௧)Tafseer
وَجَعَلْنَا الَّيْلَ وَالنَّهَارَ اٰيَتَيْنِ فَمَحَوْنَآ اٰيَةَ الَّيْلِ وَجَعَلْنَآ اٰيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ وَلِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَۗ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنٰهُ تَفْصِيْلًا ١٢
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- ஆக்கினோம்
- al-layla wal-nahāra
- ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
- இரவை/இன்னும் பகலை
- āyatayni
- ءَايَتَيْنِۖ
- இரு அத்தாட்சிகளாக
- famaḥawnā
- فَمَحَوْنَآ
- இன்னும் மங்கச்செய்தோம்
- āyata
- ءَايَةَ
- அத்தாட்சியை
- al-layli
- ٱلَّيْلِ
- இரவின்
- wajaʿalnā
- وَجَعَلْنَآ
- இன்னும் ஆக்கினோம்
- āyata
- ءَايَةَ
- அத்தாட்சியை
- l-nahāri
- ٱلنَّهَارِ
- பகலின்
- mub'ṣiratan
- مُبْصِرَةً
- ஒளிரக்கூடியதாக
- litabtaghū
- لِّتَبْتَغُوا۟
- நீங்கள் தேடுவதற்காக
- faḍlan min
- فَضْلًا مِّن
- அருளை/இருந்து
- rabbikum
- رَّبِّكُمْ
- உங்கள் இறைவன்
- walitaʿlamū
- وَلِتَعْلَمُوا۟
- இன்னும் அறிவதற்காக
- ʿadada
- عَدَدَ
- எண்ணிக்கையை
- l-sinīna
- ٱلسِّنِينَ
- ஆண்டுகளின்
- wal-ḥisāba
- وَٱلْحِسَابَۚ
- இன்னும் கணக்கை
- wakulla shayin
- وَكُلَّ شَىْءٍ
- எல்லா விஷயங்களையும்
- faṣṣalnāhu
- فَصَّلْنَٰهُ
- விவரித்தோம்/ அவற்றை
- tafṣīlan
- تَفْصِيلًا
- விரிவாக
இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையை(யும் மாதங்களின் கணக்கையும் இதன் மூலம்) நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௨)Tafseer
وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤىِٕرَهٗ فِيْ عُنُقِهٖۗ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰىهُ مَنْشُوْرًا ١٣
- wakulla insānin
- وَكُلَّ إِنسَٰنٍ
- இன்னும் எல்லா/மனிதன்
- alzamnāhu
- أَلْزَمْنَٰهُ
- இணைத்தோம்/அவனுக்கு
- ṭāirahu
- طَٰٓئِرَهُۥ
- அவனுடையசெயலை
- fī ʿunuqihi
- فِى عُنُقِهِۦۖ
- அவனுடைய கழுத்தில்
- wanukh'riju
- وَنُخْرِجُ
- வெளிப்படுத்துவோம்
- lahu yawma
- لَهُۥ يَوْمَ
- அவனுக்கு/நாளில்
- l-qiyāmati
- ٱلْقِيَٰمَةِ
- மறுமை
- kitāban
- كِتَٰبًا
- ஒரு புத்தகம்
- yalqāhu
- يَلْقَىٰهُ
- அதை சந்திப்பான்
- manshūran
- مَنشُورًا
- விரிக்கப்பட்டதாக
ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௩)Tafseer
اِقْرَأْ كِتَابَكَۗ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًاۗ ١٤
- iq'ra
- ٱقْرَأْ
- நீ படி!
- kitābaka
- كِتَٰبَكَ
- உன் புத்தகத்தை
- kafā
- كَفَىٰ
- போதுமானவன்
- binafsika
- بِنَفْسِكَ
- நீயே
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்று
- ʿalayka
- عَلَيْكَ
- உனக்கெதிராக
- ḥasīban
- حَسِيبًا
- விசாரிப்பாளன்
(அச்சமயம் அவனை நோக்கி) "இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்" (என்று கூறுவோம்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௪)Tafseer
مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَاۗ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۗ وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا ١٥
- mani ih'tadā
- مَّنِ ٱهْتَدَىٰ
- எவர்/நேர்வழிசெல்வார்
- fa-innamā yahtadī
- فَإِنَّمَا يَهْتَدِى
- அவர் நேர்வழி செல்வதெல்லாம்
- linafsihi
- لِنَفْسِهِۦۖ
- தன் நன்மைக்காக
- waman ḍalla
- وَمَن ضَلَّ
- இன்னும் எவர்/வழிகெடுவார்
- fa-innamā yaḍillu
- فَإِنَّمَا يَضِلُّ
- அவர் வழிகெடுவதெல்லாம்
- ʿalayhā
- عَلَيْهَاۚ
- தனக்கெதிராக
- walā taziru
- وَلَا تَزِرُ
- சுமக்காது
- wāziratun
- وَازِرَةٌ
- சுமக்கக்கூடியது
- wiz'ra
- وِزْرَ
- (பாவச்) சுமையை
- ukh'rā
- أُخْرَىٰۗ
- மற்றொன்றின்
- wamā kunnā
- وَمَا كُنَّا
- நாம் இருக்கவில்லை
- muʿadhibīna
- مُعَذِّبِينَ
- வேதனை செய்பவர்களாக
- ḥattā nabʿatha
- حَتَّىٰ نَبْعَثَ
- நாம் அனுப்பும் வரை
- rasūlan
- رَسُولًا
- ஒரு தூதரை
எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௫)Tafseer
وَاِذَآ اَرَدْنَآ اَنْ نُّهْلِكَ قَرْيَةً اَمَرْنَا مُتْرَفِيْهَا فَفَسَقُوْا فِيْهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِيْرًا ١٦
- wa-idhā aradnā
- وَإِذَآ أَرَدْنَآ
- நாம் நாடினால்
- an nuh'lika
- أَن نُّهْلِكَ
- நாம் அழிக்க
- qaryatan
- قَرْيَةً
- ஓர் ஊரை
- amarnā
- أَمَرْنَا
- ஏவுவோம்
- mut'rafīhā
- مُتْرَفِيهَا
- அதன் சுகவாசிகளை
- fafasaqū
- فَفَسَقُوا۟
- ஆகவேபாவம்புரிவார்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- faḥaqqa
- فَحَقَّ
- ஆகவே நிகழ்ந்துவிடும்
- ʿalayhā l-qawlu
- عَلَيْهَا ٱلْقَوْلُ
- அதன் மீது/வாக்கு
- fadammarnāhā
- فَدَمَّرْنَٰهَا
- தரைமட்டமாக்கி விடுவோம்/அதை
- tadmīran
- تَدْمِيرًا
- தரைமட்டமாக்குதல்
யாதொரு ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௬)Tafseer
وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْۢ بَعْدِ نُوْحٍۗ وَكَفٰى بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرًاۢ بَصِيْرًا ١٧
- wakam
- وَكَمْ
- எத்தனை
- ahlaknā
- أَهْلَكْنَا
- அழித்தோம்
- mina l-qurūni
- مِنَ ٱلْقُرُونِ
- தலைமுறைகளை
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- nūḥin
- نُوحٍۗ
- நூஹூக்கு
- wakafā
- وَكَفَىٰ
- இன்னும் போதுமானவன்
- birabbika
- بِرَبِّكَ
- உம் இறைவனே
- bidhunūbi
- بِذُنُوبِ
- பாவங்களை
- ʿibādihi
- عِبَادِهِۦ
- தன் அடியார்களின்
- khabīran
- خَبِيرًۢا
- ஆழ்ந்தறிபவனாக
- baṣīran
- بَصِيرًا
- உற்று நோக்குபவனாக
நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழிந்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவை யில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௭)Tafseer
مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِيْهَا مَا نَشَاۤءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَۚ يَصْلٰىهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا ١٨
- man
- مَّن
- எவர்
- kāna
- كَانَ
- இருப்பார்
- yurīdu
- يُرِيدُ
- நாடுகின்றவராக
- l-ʿājilata
- ٱلْعَاجِلَةَ
- இம்மையை
- ʿajjalnā
- عَجَّلْنَا
- முற்படுத்தி கொடுப்போம்
- lahu fīhā
- لَهُۥ فِيهَا
- அவருக்கு/அதில்
- mā nashāu
- مَا نَشَآءُ
- எதை/நாடுவோம்
- liman
- لِمَن
- எவருக்கு
- nurīdu thumma
- نُّرِيدُ ثُمَّ
- நாடுவோம்/பிறகு
- jaʿalnā
- جَعَلْنَا
- ஆக்குவோம்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- jahannama
- جَهَنَّمَ
- நரகத்தை
- yaṣlāhā
- يَصْلَىٰهَا
- எரிந்து பொசுங்குவார்/அதில்
- madhmūman
- مَذْمُومًا
- இகழப்பட்டவராக
- madḥūran
- مَّدْحُورًا
- தூரமாக்கப்பட்டவராக
எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௮)Tafseer
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤىِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا ١٩
- waman
- وَمَنْ
- எவர்(கள்)
- arāda
- أَرَادَ
- நாடுவார்(கள்)
- l-ākhirata
- ٱلْءَاخِرَةَ
- மறுமையை
- wasaʿā
- وَسَعَىٰ
- இன்னும் முயற்சி செய்வார்(கள்)
- lahā
- لَهَا
- அதற்கு
- saʿyahā
- سَعْيَهَا
- அதற்குரிய முயற்சி
- wahuwa
- وَهُوَ
- அவர்(கள்)
- mu'minun
- مُؤْمِنٌ
- நம்பிக்கை கொண்டவர்(களாக)
- fa-ulāika
- فَأُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- kāna
- كَانَ
- இருந்தது
- saʿyuhum
- سَعْيُهُم
- அவர்களுடைய முயற்சி
- mashkūran
- مَّشْكُورًا
- நன்றி செலுத்தப்பட்டதாக
எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௯)Tafseer
كُلًّا نُّمِدُّ هٰٓؤُلَاۤءِ وَهٰٓؤُلَاۤءِ مِنْ عَطَاۤءِ رَبِّكَ ۗوَمَا كَانَ عَطَاۤءُ رَبِّكَ مَحْظُوْرًا ٢٠
- kullan
- كُلًّا
- எல்லோருக்கும்
- numiddu
- نُّمِدُّ
- கொடுத்துதவுவோம்
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- இவர்களுக்கு
- wahāulāi
- وَهَٰٓؤُلَآءِ
- இன்னும் இவர்களுக்கு
- min
- مِنْ
- இருந்து
- ʿaṭāi
- عَطَآءِ
- கொடை
- rabbika
- رَبِّكَۚ
- உம் இறைவனின்
- wamā kāna
- وَمَا كَانَ
- இருக்கவில்லை
- ʿaṭāu
- عَطَآءُ
- கொடை
- rabbika
- رَبِّكَ
- உம் இறைவனின்
- maḥẓūran
- مَحْظُورًا
- தடுக்கப்பட்டதாக
(இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உங்கள் இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உங்கள் இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்படுவதில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௦)Tafseer