Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 11

Al-Isra

(al-ʾIsrāʾ)

௧௦௧

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى تِسْعَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ فَسْـَٔلْ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اِذْ جَاۤءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّيْ لَاَظُنُّكَ يٰمُوْسٰى مَسْحُوْرًا ١٠١

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
mūsā
مُوسَىٰ
மூஸாவிற்கு
tis'ʿa
تِسْعَ
ஒன்பது
āyātin
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகள்
bayyinātin
بَيِّنَٰتٍۖ
தெளிவானவை
fasal
فَسْـَٔلْ
ஆகவே கேட்பீராக
banī
بَنِىٓ
சந்ததிகளை
is'rāīla
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
idh
إِذْ
அவர் வந்த போது
jāahum
جَآءَهُمْ
அவர்களிடம்
faqāla
فَقَالَ
கூறினான்
lahu
لَهُۥ
அவரைக் நோக்கி
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்ன்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
la-aẓunnuka
لَأَظُنُّكَ
எண்ணுகிறேன்/உம்மை
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
masḥūran
مَسْحُورًا
சூனியக்காரராக
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) நீங்கள் இஸ்ராயீலின் சந்ததிகளைக் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி "மூஸாவே! நிச்சயமாக நீங்கள் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உங்களை எண்ணுகிறேன்" என்று கூறினான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௧)
Tafseer
௧௦௨

قَالَ لَقَدْ عَلِمْتَ مَآ اَنْزَلَ هٰٓؤُلَاۤءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَاۤىِٕرَۚ وَاِنِّيْ لَاَظُنُّكَ يٰفِرْعَوْنُ مَثْبُوْرًا ١٠٢

qāla
قَالَ
கூறினார்
laqad
لَقَدْ
திட்டவட்டமாக
ʿalim'ta
عَلِمْتَ
நீ அறிந்தாய்
mā anzala
مَآ أَنزَلَ
இறக்கிவைக்கவில்லை
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவற்றை
illā
إِلَّا
தவிர
rabbu
رَبُّ
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
baṣāira
بَصَآئِرَ
தெளிவான அத்தாட்சிகளாக
wa-innī
وَإِنِّى
இன்னும் நிச்சயமாக நான்
la-aẓunnuka
لَأَظُنُّكَ
எண்ணுகிறேன்/உன்னை
yāfir'ʿawnu
يَٰفِرْعَوْنُ
ஃபிர்அவ்னே
mathbūran
مَثْبُورًا
அழிந்துவிடுபவனாக
அதற்கு மூஸா (அவனை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கி வைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு காலம் பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்" என்று கூறினார். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௨)
Tafseer
௧௦௩

فَاَرَادَ اَنْ يَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِيْعًاۙ ١٠٣

fa-arāda
فَأَرَادَ
நாடினான்
an
أَن
அவன் விரட்டிவிட
yastafizzahum
يَسْتَفِزَّهُم
அவன் விரட்டிவிட இவர்களை
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
பூமியிலிருந்து
fa-aghraqnāhu
فَأَغْرَقْنَٰهُ
ஆகவே மூழ்கடித்தோம்/ அவனை
waman
وَمَن
இன்னும் எவர்கள்
maʿahu
مَّعَهُۥ
அவனுடன்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
(அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் அவன் தன் நாட்டிலிருந்து விரட்டி விடவே எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَّقُلْنَا مِنْۢ بَعْدِهٖ لِبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَاۤءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيْفًاۗ ١٠٤

waqul'nā
وَقُلْنَا
இன்னும் நாம் கூறினோம்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
இதன் பின்னர்
libanī
لِبَنِىٓ
சந்ததிகளுக்கு
is'rāīla
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
us'kunū
ٱسْكُنُوا۟
நீங்கள் வசியுங்கள்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியில்
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வந்தால்
waʿdu l-ākhirati
وَعْدُ ٱلْءَاخِرَةِ
வாக்குறுதி/மறுமையின்
ji'nā bikum
جِئْنَا بِكُمْ
உங்களை வரவைப்போம்
lafīfan
لَفِيفًا
அனைவரையும், ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக
இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: "நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௪)
Tafseer
௧௦௫

وَبِالْحَقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَقِّ نَزَلَۗ وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًاۘ ١٠٥

wabil-ḥaqi
وَبِٱلْحَقِّ
இன்னும் உண்மையைக் கொண்டே
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
wabil-ḥaqi
وَبِٱلْحَقِّ
இன்னும் உண்மையைக் கொண்டே
nazala
نَزَلَۗ
இது இறங்கியது
wamā arsalnāka illā
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا
நாம் அனுப்பவில்லை/உம்மை/தவிர
mubashiran
مُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராக
wanadhīran
وَنَذِيرًا
இன்னும் எச்சரிப்பவராக
முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உங்களை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௫)
Tafseer
௧௦௬

وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِيْلًا ١٠٦

waqur'ānan
وَقُرْءَانًا
இன்னும் குர்ஆனாக
faraqnāhu
فَرَقْنَٰهُ
நாம் தெளிவு படுத்தினோம்/இதை
litaqra-ahu
لِتَقْرَأَهُۥ
நீர் ஓதுவதற்காக/இதை
ʿalā l-nāsi
عَلَى ٱلنَّاسِ
மக்களுக்கு
ʿalā muk'thin
عَلَىٰ مُكْثٍ
கவனத்துடன்
wanazzalnāhu
وَنَزَّلْنَٰهُ
இன்னும் இறக்கினோம்/இதை
tanzīlan
تَنزِيلًا
கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
(நபியே!) மனிதர்களுக்கு நீங்கள் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச் சிறுகவும் இறக்கி வைக்கிறோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௬)
Tafseer
௧௦௭

قُلْ اٰمِنُوْا بِهٖٓ اَوْ لَا تُؤْمِنُوْاۗ اِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖٓ اِذَا يُتْلٰى عَلَيْهِمْ يَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًاۙ ١٠٧

qul
قُلْ
கூறுவீராக
āminū
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
bihi aw
بِهِۦٓ أَوْ
இதை/அல்லது
lā tu'minū
لَا تُؤْمِنُوٓا۟ۚ
நம்பிக்கை கொள்ளாதீர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ūtū
أُوتُوا۟
கொடுக்கப்பட்டனர்
l-ʿil'ma
ٱلْعِلْمَ
கல்வி
min qablihi
مِن قَبْلِهِۦٓ
இதற்கு முன்னர்
idhā yut'lā
إِذَا يُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
yakhirrūna
يَخِرُّونَ
விழுவார்கள்
lil'adhqāni
لِلْأَذْقَانِ
தாடைகள் மீது
sujjadan
سُجَّدًا
சிரம்பணிந்தவர்களாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் (இந்தக் குர்ஆனை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதனை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம் பணிவார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௭)
Tafseer
௧௦௮

وَّيَقُوْلُوْنَ سُبْحٰنَ رَبِّنَآ اِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُوْلًا ١٠٨

wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுவார்கள்
sub'ḥāna
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
rabbinā
رَبِّنَآ
எங்கள் இறைவன்
in kāna
إِن كَانَ
நிச்சயமாக/இருக்கிறது
waʿdu
وَعْدُ
வாக்கு
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவனின்
lamafʿūlan
لَمَفْعُولًا
நிறைவேற்றப்பட்டதாகவே
அன்றி, (அவர்கள்) "எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறி விட்டது" என்றும் கூறுவார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௮)
Tafseer
௧௦௯

وَيَخِرُّوْنَ لِلْاَذْقَانِ يَبْكُوْنَ وَيَزِيْدُهُمْ خُشُوْعًا ۩ ١٠٩

wayakhirrūna
وَيَخِرُّونَ
இன்னும் விழுவார்கள்
lil'adhqāni
لِلْأَذْقَانِ
தாடைகள் மீது
yabkūna
يَبْكُونَ
அழுவார்கள் (அழுதவர்களாக)
wayazīduhum
وَيَزِيدُهُمْ
இன்னும் அதிகப்படுத்தும் அவர்களுக்கு
khushūʿan
خُشُوعًا۩
அச்சத்தை, பணிவை
அன்றி, அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௯)
Tafseer
௧௧௦

قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَۗ اَيًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَاۤءُ الْحُسْنٰىۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰلِكَ سَبِيْلًا ١١٠

quli
قُلِ
கூறுவீராக
id'ʿū
ٱدْعُوا۟
அழையுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
awi
أَوِ
அல்லது
id'ʿū
ٱدْعُوا۟
அழையுங்கள்
l-raḥmāna
ٱلرَّحْمَٰنَۖ
பேரருளாளன்
ayyan mā
أَيًّا مَّا
எப்படி, எதை
tadʿū
تَدْعُوا۟
அழைத்தாலும்
falahu l-asmāu
فَلَهُ ٱلْأَسْمَآءُ
அவனுக்கு/பெயர்கள்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰۚ
மிக அழகியவை
walā tajhar
وَلَا تَجْهَرْ
மிக சப்தமிட்டு ஓதாதீர்
biṣalātika
بِصَلَاتِكَ
உமது தொழுகையில்
walā tukhāfit
وَلَا تُخَافِتْ
மிக மெதுவாகவும் ஓதாதீர்
bihā
بِهَا
அதில்
wa-ib'taghi
وَٱبْتَغِ
தேடுவீராக
bayna
بَيْنَ
இடையில்
dhālika
ذَٰلِكَ
அது
sabīlan
سَبِيلًا
ஒரு வழியை
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது ரஹ்மான் என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப் பெயர்கள் இருக்கின்றன." (நபியே!) உங்களுடைய தொழுகையில் நீங்கள் மிக சப்தமிட்டு ஓதாதீர்கள்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்கள்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடியுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௧௦)
Tafseer