Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 10

Al-Isra

(al-ʾIsrāʾ)

௯௧

اَوْ تَكُوْنَ لَكَ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الْاَنْهٰرَ خِلٰلَهَا تَفْجِيْرًاۙ ٩١

aw
أَوْ
அல்லது
takūna
تَكُونَ
இருக்கிறது
laka
لَكَ
உமக்கு
jannatun
جَنَّةٌ
ஒரு தோட்டம்
min
مِّن
இருந்து
nakhīlin
نَّخِيلٍ
பேரிட்சை மரம்
waʿinabin
وَعِنَبٍ
இன்னும் திராட்சை செடி
fatufajjira
فَتُفَجِّرَ
பிளந்தோடச் செய்கின்றீர்
l-anhāra
ٱلْأَنْهَٰرَ
நதிகளை
khilālahā
خِلَٰلَهَا
அதற்கு மத்தியில்
tafjīran
تَفْجِيرًا
பிளப்பதாக
"அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உங்களுக்கு இருந்தால் அன்றி (உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௧)
Tafseer
௯௨

اَوْ تُسْقِطَ السَّمَاۤءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا اَوْ تَأْتِيَ بِاللّٰهِ وَالْمَلٰۤىِٕكَةِ قَبِيْلًاۙ ٩٢

aw
أَوْ
அல்லது
tus'qiṭa
تُسْقِطَ
நீர் விழவைக்கின்றீர்
l-samāa
ٱلسَّمَآءَ
வானத்தை
kamā
كَمَا
போன்று
zaʿamta
زَعَمْتَ
நீர் கூறியது
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
kisafan
كِسَفًا
துண்டுகளாக
aw
أَوْ
அல்லது
tatiya bil-lahi
تَأْتِىَ بِٱللَّهِ
அல்லாஹ்வை வரவைக்கின்றீர்
wal-malāikati
وَٱلْمَلَٰٓئِكَةِ
இன்னும் வானவர்களை
qabīlan
قَبِيلًا
கண்முன்
"அல்லது நீங்கள் எண்ணுகிற பிரகாரம் வானத்தின் முகடு இடிந்து, அதில் ஒரு துண்டு எங்கள் (தலை) மீது விழுந்தாலன்றி அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டு வந்தாலன்றி (உங்களை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௨)
Tafseer
௯௩

اَوْ يَكُوْنَ لَكَ بَيْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰى فِى السَّمَاۤءِ ۗوَلَنْ نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتّٰى تُنَزِّلَ عَلَيْنَا كِتٰبًا نَّقْرَؤُهٗۗ قُلْ سُبْحَانَ رَبِّيْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا رَّسُوْلًا ࣖ ٩٣

aw
أَوْ
அல்லது
yakūna
يَكُونَ
இருக்கும்
laka
لَكَ
உமக்கு
baytun
بَيْتٌ
ஒரு வீடு
min zukh'rufin
مِّن زُخْرُفٍ
தங்கத்தில்
aw
أَوْ
அல்லது
tarqā
تَرْقَىٰ
நீர் ஏறுவாய்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்
walan nu'mina
وَلَن نُّؤْمِنَ
அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்
liruqiyyika
لِرُقِيِّكَ
உமது ஏறுதலுக்காக
ḥattā
حَتَّىٰ
வரை
tunazzila
تُنَزِّلَ
இறக்கி வைப்பீர்
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
kitāban
كِتَٰبًا
ஒரு வேதத்தை
naqra-uhu
نَّقْرَؤُهُۥۗ
அதைப் படிக்கின்றோம்
qul
قُلْ
கூறுவீராக
sub'ḥāna
سُبْحَانَ
மிகப்பரிசுத்தமானவன்
rabbī
رَبِّى
என் இறைவன்
hal
هَلْ
?
kuntu
كُنتُ
இருக்கின்றேன்
illā
إِلَّا
தவிர
basharan
بَشَرًا
ஒரு மனிதராக
rasūlan
رَّسُولًا
தூதரான
"அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உங்களுக்கு இருந்தாலன்றி (நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.) அல்லது நீங்கள் வானத்தின் மீது ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீங்கள் இறக்கிவைக்காத வரையில் நீங்கள் வானத்தில் ஏறியதையும் நம்பமாட்டோம்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?" ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௩)
Tafseer
௯௪

وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْٓا اِذْ جَاۤءَهُمُ الْهُدٰٓى اِلَّآ اَنْ قَالُوْٓا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا ٩٤

wamā manaʿa
وَمَا مَنَعَ
தடுக்கவில்லை
l-nāsa
ٱلنَّاسَ
மனிதர்களை
an yu'minū
أَن يُؤْمِنُوٓا۟
அவர்கள் நம்பிக்கைகொள்வது
idh
إِذْ
போது
jāahumu
جَآءَهُمُ
அவர்களுக்கு வந்தது
l-hudā
ٱلْهُدَىٰٓ
நேர்வழி
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوٓا۟
அவர்கள் கூறியது
abaʿatha
أَبَعَثَ
அனுப்பினானா?
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
basharan
بَشَرًا
மனிதரை
rasūlan
رَّسُولًا
தூதராக
மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில் அவர்கள் "அல்லாஹ் ஒரு மனிதரையா (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான்" என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதைத் தடை செய்வதற்கு ஒன்றுமேயில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௪)
Tafseer
௯௫

قُلْ لَّوْ كَانَ فِى الْاَرْضِ مَلٰۤىِٕكَةٌ يَّمْشُوْنَ مُطْمَىِٕنِّيْنَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَاۤءِ مَلَكًا رَّسُوْلًا ٩٥

qul
قُل
கூறுவீராக
law kāna
لَّوْ كَانَ
இருந்திருந்தால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
malāikatun
مَلَٰٓئِكَةٌ
வானவர்கள்
yamshūna
يَمْشُونَ
நடக்கின்றனர்
muṭ'ma-innīna
مُطْمَئِنِّينَ
நிம்மதியானவர்களாக
lanazzalnā
لَنَزَّلْنَا
இறக்கியிருப்போம்
ʿalayhim
عَلَيْهِم
அவர்களிடம்
mina
مِّنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
malakan
مَلَكًا
வானவரை
rasūlan
رَّسُولًا
ஒரு தூதராக
(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) மலக்குகளே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உங்களை நம்முடைய தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௫)
Tafseer
௯௬

قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۢ بَيْنِيْ وَبَيْنَكُمْۗ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًاۢ بَصِيْرًا ٩٦

qul
قُلْ
கூறுவீராக
kafā
كَفَىٰ
போதுமாகி விட்டான்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
shahīdan
شَهِيدًۢا
சாட்சியாளனாக
baynī
بَيْنِى
எனக்கிடையில்
wabaynakum
وَبَيْنَكُمْۚ
இன்னும் உங்களுக்கிடையில்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
biʿibādihi
بِعِبَادِهِۦ
தன் அடியார்களை
khabīran
خَبِيرًۢا
ஆழ்ந்தறிந்தவனாக
baṣīran
بَصِيرًا
உற்று நோக்கினவனாக
(பின்னும்) நீங்கள் கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனும், உற்றுநோக்குபவனுமாக இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௬)
Tafseer
௯௭

وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِهٖۗ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّاۗ مَأْوٰىهُمْ جَهَنَّمُۗ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا ٩٧

waman
وَمَن
எவரை
yahdi
يَهْدِ
நேர்வழி செலுத்துவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fahuwa
فَهُوَ
அவர்தான்
l-muh'tadi
ٱلْمُهْتَدِۖ
நேர்வழி பெற்றவர்
waman
وَمَن
இன்னும் எவரை
yuḍ'lil
يُضْلِلْ
வழிகெடுப்பான்
falan tajida
فَلَن تَجِدَ
அறவே காணமாட்டீர்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
awliyāa
أَوْلِيَآءَ
உதவியாளர்களை
min dūnihi
مِن دُونِهِۦۖ
அவனையன்றி
wanaḥshuruhum
وَنَحْشُرُهُمْ
இன்னும் ஒன்றுசேர்ப்போம் அவர்களை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
ʿalā wujūhihim
عَلَىٰ وُجُوهِهِمْ
தங்கள் முகங்கள் மீது
ʿum'yan
عُمْيًا
குருடர்களாக
wabuk'man
وَبُكْمًا
இன்னும் ஊமையர்களாக
waṣumman
وَصُمًّاۖ
இன்னும் செவிடர்களாக
mawāhum
مَّأْوَىٰهُمْ
அவர்களுடைய தங்குமிடம்
jahannamu
جَهَنَّمُۖ
நரகம்தான்
kullamā khabat
كُلَّمَا خَبَتْ
அது அனல் தணியும் போதெல்லாம்
zid'nāhum
زِدْنَٰهُمْ
அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு
saʿīran
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நெருப்பை
எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள்தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அத்தகையவர் களுக்கு அவனையன்றி உதவி செய்பவர்களை நீங்கள் காண மாட்டீர்கள். அன்றி, மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௭)
Tafseer
௯௮

ذٰلِكَ جَزَاۤؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْٓا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا ٩٨

dhālika
ذَٰلِكَ
இது
jazāuhum
جَزَآؤُهُم
கூலி, தண்டனை/அவர்களின்
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக/அவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
waqālū
وَقَالُوٓا۟
இன்னும் கூறினர்
a-idhā kunnā
أَءِذَا كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்?
ʿiẓāman
عِظَٰمًا
எலும்புகளாக
warufātan
وَرُفَٰتًا
இன்னும் மக்கியவர்களாக
a-innā
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
lamabʿūthūna
لَمَبْعُوثُونَ
எழுப்பப்படுவோம்
khalqan
خَلْقًا
படைப்பாக
jadīdan
جَدِيدًا
புதியது
அவர்கள், நம்முடைய வசனங்களை நிராகரித்து விட்டதுடன் "நாம் (மரணித்து) எலும்பாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௮)
Tafseer
௯௯

۞ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ قَادِرٌ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ اَجَلًا لَّا رَيْبَ فِيْهِۗ فَاَبَى الظّٰلِمُوْنَ اِلَّا كُفُوْرًا ٩٩

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
qādirun
قَادِرٌ
ஆற்றலுடையவன்
ʿalā
عَلَىٰٓ
மீது
an yakhluqa
أَن يَخْلُقَ
அவன் படைக்க
mith'lahum
مِثْلَهُمْ
அவர்கள் போன்றவர்களை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajalan
أَجَلًا
ஒரு தவணையை
lā rayba
لَّا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhi
فِيهِ
அதில்
fa-abā
فَأَبَى
ஏற்க மறுத்தார்(கள்)
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அக்கிரமக்காரர்கள்
illā kufūran
إِلَّا كُفُورًا
தவிர/நிராகரிப்பை
மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் யாதொரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதனை நிராகரிக்காமலில்லை! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௯)
Tafseer
௧௦௦

قُلْ لَّوْ اَنْتُمْ تَمْلِكُوْنَ خَزَاۤىِٕنَ رَحْمَةِ رَبِّيْٓ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِۗ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا ࣖ ١٠٠

qul
قُل
கூறுவீராக
law antum tamlikūna
لَّوْ أَنتُمْ تَمْلِكُونَ
நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால்
khazāina
خَزَآئِنَ
பொக்கிஷங்களை
raḥmati
رَحْمَةِ
அருளின்
rabbī
رَبِّىٓ
என் இறைவனுடைய
idhan
إِذًا
அப்போது
la-amsaktum
لَّأَمْسَكْتُمْ
தடுத்துக் கொண்டிருப்பீர்கள்
khashyata
خَشْيَةَ
பயந்து
l-infāqi
ٱلْإِنفَاقِۚ
தர்மம் செய்வது
wakāna l-insānu
وَكَانَ ٱلْإِنسَٰنُ
இருக்கின்றான்/ மனிதன்
qatūran
قَتُورًا
மகா கஞ்சனாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகிவிடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௦)
Tafseer