Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Word by Word

Al-Isra

(al-ʾIsrāʾ)

bismillaahirrahmaanirrahiim

سُبْحٰنَ الَّذِيْٓ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِيْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَاۗ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ ١

sub'ḥāna
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
alladhī
ٱلَّذِىٓ
எத்தகையவன்
asrā
أَسْرَىٰ
அழைத்துச்சென்றான்
biʿabdihi
بِعَبْدِهِۦ
தன் அடிமையை
laylan
لَيْلًا
இரவில்
mina l-masjidi
مِّنَ ٱلْمَسْجِدِ
இருந்து/மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனிதமானது
ilā l-masjidi
إِلَى ٱلْمَسْجِدِ
வரை/அல் மஸ்ஜிது
l-aqṣā
ٱلْأَقْصَا
அல் அக்ஸா
alladhī
ٱلَّذِى
எது
bāraknā
بَٰرَكْنَا
அருள் வளம் புரிந்தோம்
ḥawlahu
حَوْلَهُۥ
அதைச் சுற்றி
linuriyahu
لِنُرِيَهُۥ
நாம் காண்பிப்பதற்காக/அவருக்கு
min āyātinā
مِنْ ءَايَٰتِنَآۚ
நம் அத்தாட்சிகளில்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-baṣīru
ٱلْبَصِيرُ
உற்று நோக்குபவன்
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற பள்ளியில் இருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடைய செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும், உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧)
Tafseer

وَاٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِيْ وَكِيْلًاۗ ٢

waātaynā
وَءَاتَيْنَا
கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wajaʿalnāhu
وَجَعَلْنَٰهُ
இன்னும் ஆக்கினோம்/அதை
hudan
هُدًى
நேர்வழி காட்டியாக
libanī
لِّبَنِىٓ
சந்ததிகளுக்கு
is'rāīla
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
allā tattakhidhū
أَلَّا تَتَّخِذُوا۟
நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று
min dūnī
مِن دُونِى
என்னைத் தவிர
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளனாக (பாதுகாவலனாக)
நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதனை ஒரு வழிகாட்டியாக அமைத்து "நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨)
Tafseer

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍۗ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا ٣

dhurriyyata
ذُرِّيَّةَ
சந்ததிகளே
man ḥamalnā
مَنْ حَمَلْنَا
எவர்கள்/ஏற்றினோம்
maʿa nūḥin
مَعَ نُوحٍۚ
நூஹூடன்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
இருந்தார்
ʿabdan
عَبْدًا
ஓர் அடியாராக
shakūran
شَكُورًا
அதிகம் நன்றி செலுத்துகிறவர்
(இஸ்ராயீலின் சந்ததிகளே உங்கள் மூதாதைகளைக் கப்பலில்) நாம் நூஹ்வுடன் சுமந்து (வெள்ளப்பிரளயத்திலிருந்து பாதுகாத்துக்) கொண்டோம். அவர்களின் சந்ததிகளே! அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (அவ்வாறே இஸ்ராயீலின் சந்ததிகளாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩)
Tafseer

وَقَضَيْنَآ اِلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ فِى الْكِتٰبِ لَتُفْسِدُنَّ فِى الْاَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيْرًا ٤

waqaḍaynā
وَقَضَيْنَآ
அறிவித்தோம்
ilā
إِلَىٰ
க்கு
banī
بَنِىٓ
சந்ததிகள்
is'rāīla
إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலின்
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
latuf'sidunna
لَتُفْسِدُنَّ
நிச்சயம் விஷமம் செய்வீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
marratayni
مَرَّتَيْنِ
இரு முறை
walataʿlunna
وَلَتَعْلُنَّ
இன்னும் நிச்சயமாக பெருமைகொள்வீர்கள்
ʿuluwwan
عُلُوًّا
பெருமை
kabīran
كَبِيرًا
பெரியது
இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள்! என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு செய்துள்ளோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪)
Tafseer

فَاِذَا جَاۤءَ وَعْدُ اُوْلٰىهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَآ اُولِيْ بَأْسٍ شَدِيْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّيَارِۗ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا ٥

fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வரும்போது
waʿdu
وَعْدُ
வாக்கு
ūlāhumā
أُولَىٰهُمَا
அவ்விரண்டில் முதல்
baʿathnā
بَعَثْنَا
அனுப்பினோம்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ʿibādan
عِبَادًا
அடியார்களை
lanā
لَّنَآ
நமக்குரிய
ulī
أُو۟لِى
உடையவர்கள்
basin
بَأْسٍ
பலம்
shadīdin
شَدِيدٍ
கடுமையானது
fajāsū
فَجَاسُوا۟
ஊடுருவிச் சென்றனர்
khilāla
خِلَٰلَ
நடுவில்
l-diyāri
ٱلدِّيَارِۚ
வீடுகளுக்கு
wakāna
وَكَانَ
இருந்தது
waʿdan
وَعْدًا
ஒரு வாக்காக
mafʿūlan
مَّفْعُولًا
நிறைவேற்றப்பட்டது
அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக இரக்கமற்ற) பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்கு ஊடுருவிச்சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் இடித்தழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நம்முடைய முந்திய) வாக்குறுதி நிறைவேறியது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫)
Tafseer

ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَاَمْدَدْنٰكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِيْرًا ٦

thumma
ثُمَّ
பிறகு
radadnā
رَدَدْنَا
திருப்பினோம்
lakumu
لَكُمُ
உங்களுக்குசாதகமாக
l-karata
ٱلْكَرَّةَ
தாக்குதலை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராக
wa-amdadnākum
وَأَمْدَدْنَٰكُم
இன்னும் உதவினோம்/உங்களுக்கு
bi-amwālin
بِأَمْوَٰلٍ
செல்வங்களைக் கொண்டு
wabanīna
وَبَنِينَ
இன்னும் ஆண்பிள்ளைகள்
wajaʿalnākum
وَجَعَلْنَٰكُمْ
இன்னும் ஆக்கினோம்/ உங்களை
akthara
أَكْثَرَ
அதிகமானவர்களாக
nafīran
نَفِيرًا
எண்ணிக்கையில்
பின்னர் (உங்கள்) காலச் சக்கரத்தைத் திருப்பி உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து (ஏராளமான) பொருள்களையும் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬)
Tafseer

اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُمْ ۗوَاِنْ اَسَأْتُمْ فَلَهَاۗ فَاِذَا جَاۤءَ وَعْدُ الْاٰخِرَةِ لِيَسٗۤـُٔوْا وُجُوْهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّلِيُتَبِّرُوْا مَا عَلَوْا تَتْبِيْرًا ٧

in aḥsantum
إِنْ أَحْسَنتُمْ
நீங்கள் நன்மை செய்தால்
aḥsantum
أَحْسَنتُمْ
நன்மை செய்தீர்கள்
li-anfusikum
لِأَنفُسِكُمْۖ
உங்கள் ஆன்மாக்களுக்குத்தான்
wa-in asatum
وَإِنْ أَسَأْتُمْ
நீங்கள் தீமை செய்தால்
falahā
فَلَهَاۚ
அதுவும் அவற்றுக்கே
fa-idhā jāa
فَإِذَا جَآءَ
வந்த போது
waʿdu l-ākhirati
وَعْدُ ٱلْءَاخِرَةِ
முறை/மறு
liyasūū
لِيَسُۥٓـُٔوا۟
அவர்கள் கெடுப்பதற்கு
wujūhakum
وُجُوهَكُمْ
உங்கள் முகங்களை
waliyadkhulū
وَلِيَدْخُلُوا۟
இன்னும் அவர்கள் நுழைவதற்கு
l-masjida
ٱلْمَسْجِدَ
மஸ்ஜிதில்
kamā dakhalūhu
كَمَا دَخَلُوهُ
அவர்கள் நுழைந்தது போன்று/அதில்
awwala
أَوَّلَ
முதல்
marratin
مَرَّةٍ
முறை
waliyutabbirū
وَلِيُتَبِّرُوا۟
இன்னும் அவர்கள் அழிப்பதற்காக
mā ʿalaw
مَا عَلَوْا۟
எவற்றை/மிகைத்தனர்
tatbīran
تَتْبِيرًا
அழித்தல்
(அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்களுடைய முகங்களை கெடுத்து, (துன்புறுத்தி) முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவைகளையெல்லாம் இடித்தழித்து நாசமாக்கக் கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭)
Tafseer

عَسٰى رَبُّكُمْ اَنْ يَّرْحَمَكُمْۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَاۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِيْنَ حَصِيْرًا ٨

ʿasā rabbukum
عَسَىٰ رَبُّكُمْ
ஆகலாம்/உங்கள் இறைவன்
an yarḥamakum
أَن يَرْحَمَكُمْۚ
கருணை புரிய/உங்களுக்கு
wa-in ʿudttum
وَإِنْ عُدتُّمْ
நீங்கள் திரும்பினால்
ʿud'nā
عُدْنَاۘ
நாம் திரும்புவோம்
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
jahannama
جَهَنَّمَ
நரகத்தை
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ḥaṣīran
حَصِيرًا
விரிப்பாக
(நீங்கள் விஷமம் செய்வதைவிட்டுப் பின்னும் விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணைப் புரியலாம். (அவ்வாறன்றி உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். அன்றி (இத்தகைய) நிராகரிப்பவரை நரகம் சூழ்ந்து கொள்ளும்படியும் செய்வோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮)
Tafseer

اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِيْ لِلَّتِيْ هِيَ اَقْوَمُ وَيُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًاۙ ٩

inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இது
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆன்
yahdī
يَهْدِى
நேர்வழி காட்டுகிறது
lillatī
لِلَّتِى
எதன் பக்கம்
hiya aqwamu
هِىَ أَقْوَمُ
அது/மிக சரியானது
wayubashiru
وَيُبَشِّرُ
இன்னும் நற்செய்தி கூறுகிறது
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்வார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
anna
أَنَّ
நிச்சயமாக
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajran kabīran
أَجْرًا كَبِيرًا
கூலி/பெரியது
நிச்சயமாக இந்தக் குர்ஆன் (உங்களுக்கு) மிக்க நேரானதற்கு வழி காட்டுகின்றது; அன்றி (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯)
Tafseer
௧௦

وَّاَنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِيْمًا ࣖ ١٠

wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
aʿtadnā
أَعْتَدْنَا
ஏற்படுத்தி இருக்கிறோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனையை
alīman
أَلِيمًا
துன்புறுத்தக்கூடியது
அன்றி, (உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறோம் (என்றும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦)
Tafseer