Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௪

Qur'an Surah An-Nahl Verse 94

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَتَّخِذُوْٓا اَيْمَانَكُمْ دَخَلًا ۢ بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوْتِهَا وَتَذُوْقُوا السُّوْۤءَ بِمَا صَدَدْتُّمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ ۚوَلَكُمْ عَذَابٌ عَظِيْمٌ (النحل : ١٦)

walā tattakhidhū
وَلَا تَتَّخِذُوٓا۟
And (do) not take
ஆக்கிக் கொள்ளாதீர்கள்
aymānakum
أَيْمَٰنَكُمْ
your oaths
உங்கள் சத்தியங்களை
dakhalan
دَخَلًۢا
(as) a deception
ஏமாற்றமாக
baynakum
بَيْنَكُمْ
between you
உங்களுக்கு மத்தியில்
fatazilla
فَتَزِلَّ
lest should slip
சருகிவிடும்
qadamun baʿda
قَدَمٌۢ بَعْدَ
a foot after
ஒரு பாதம்/பின்பு
thubūtihā
ثُبُوتِهَا
it is firmly planted
அது நிலைபெறுதல்
watadhūqū
وَتَذُوقُوا۟
and you would taste
இன்னும் அனுபவிப்பீர்கள்
l-sūa
ٱلسُّوٓءَ
the evil
துன்பத்தை
bimā ṣadadttum
بِمَا صَدَدتُّمْ
for what you hindered
நீங்கள் தடுத்த காரணத்தால்
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah
அல்லாஹ்வின்
walakum
وَلَكُمْ
and for you
இன்னும் உங்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
ஒரு வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
great
மகத்தானது

Transliteration:

Wa laa tattakhizooo aimaanakum dakhalam bainakum ftazilla qadamum ba'da subootihaa wa tazooqus sooo'a bimmaa sadattum 'an sabeelil laahi wa lakum 'azaabun 'azeem (QS. an-Naḥl:94)

English Sahih International:

And do not take your oaths as [means of] deceit between you, lest a foot slip after it was [once] firm, and you would taste evil [in this world] for what [people] you diverted from the way of Allah, and you would have [in the Hereafter] a great punishment. (QS. An-Nahl, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்களுடைய சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நிலைபெற்ற (உங்களுடைய) பாதம் பெயர்ந்து உறுதி குலைந்துவிடும். தவிர, (சத்தியத்தை முறிப்பதினால்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்துக் கொள்வதன் காரணமாக பல துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கும்படி நேரிடும். அன்றி, கடுமையான வேதனையும் உங்களுக்குக் கிடைக்கும். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௪)

Jan Trust Foundation

நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் சத்தியங்களை உங்களுக்கு மத்தியில் ஏமாற்றமாக, (வஞ்சகமாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால்) பாதம் அது நிலைபெற்ற பின் சருகிவிடும். (சத்தியத்தை முறித்து) அல்லாஹ்வின் பாதையை விட்டு நீங்கள் தடுத்த காரணத்தால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். இன்னும் உங்களுக்கு மகத்தானதொரு வேதனை உண்டு.