குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௩
Qur'an Surah An-Nahl Verse 93
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْ شَاۤءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ يُّضِلُّ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُۗ وَلَتُسْـَٔلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُوْنَ (النحل : ١٦)
- walaw shāa
- وَلَوْ شَآءَ
- And if Allah (had) willed
- நாடியிருந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- Allah (had) willed
- அல்லாஹ்
- lajaʿalakum
- لَجَعَلَكُمْ
- surely He (could) have made you
- உங்களை ஆக்கியிருப்பான்
- ummatan
- أُمَّةً
- a nation
- ஒரு சமுதாயமாக
- wāḥidatan
- وَٰحِدَةً
- one
- ஒரே
- walākin
- وَلَٰكِن
- but
- எனினும்
- yuḍillu
- يُضِلُّ
- He lets go astray
- வழிகெடுக்கின்றான்
- man yashāu
- مَن يَشَآءُ
- whom He wills
- எவரை/நாடுகின்றான்
- wayahdī
- وَيَهْدِى
- and guides
- இன்னும் நேர்வழி செலுத்துகின்றான்
- man yashāu
- مَن يَشَآءُۚ
- whom He wills
- எவரை/நாடுகின்றான்
- walatus'alunna
- وَلَتُسْـَٔلُنَّ
- And surely you will be questioned
- நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள்
- ʿammā kuntum
- عَمَّا كُنتُمْ
- about what you used (to)
- எதைப்பற்றி/ இருந்தீர்கள்
- taʿmalūna
- تَعْمَلُونَ
- do
- செய்வீர்கள்
Transliteration:
Wa law shaaa'al laahu laja'alakum ummmatanw waahidatanw wa laakiny yudillu many-yashaaa'u wa yahdee many-yashaaa'; wa latus'alunna 'ammaa kuntum ta'maloon(QS. an-Naḥl:93)
English Sahih International:
And if Allah had willed, He could have made you [of] one religion, but He sends astray whom He wills and guides whom He wills. And you will surely be questioned about what you used to do. (QS. An-Nahl, Ayah ௯௩)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பினராக ஆக்கியிருப்பான். எனினும், (இறைவன்) தான் நாடியவர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அவன் விட்டுவிடுகிறான். தான் நாடியவர்களை (அவர்களின் நற்செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்துகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) கேட்கப்படுவீர்கள். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௩)
Jan Trust Foundation
மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் நாடியிருந்தால் (இஸ்லாமைப் பின்பற்றுகிற) ஒரே ஒரு சமுதாய மாக உங்களை ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கின்றான். தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகின்றான். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி நிச்சயமாக (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.