Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௨

Qur'an Surah An-Nahl Verse 92

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَكُوْنُوْا كَالَّتِيْ نَقَضَتْ غَزْلَهَا مِنْۢ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًاۗ تَتَّخِذُوْنَ اَيْمَانَكُمْ دَخَلًا ۢ بَيْنَكُمْ اَنْ تَكُوْنَ اُمَّةٌ هِيَ اَرْبٰى مِنْ اُمَّةٍ ۗاِنَّمَا يَبْلُوْكُمُ اللّٰهُ بِهٖۗ وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ مَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ (النحل : ١٦)

walā takūnū
وَلَا تَكُونُوا۟
And (do) not be
ஆகிவிடாதீர்கள்
ka-allatī
كَٱلَّتِى
like her who
எவள்/போன்று
naqaḍat
نَقَضَتْ
untwists
பிரித்தாள்
ghazlahā
غَزْلَهَا
her spun yarn
தான் நெய்த நூலை
min baʿdi quwwatin
مِنۢ بَعْدِ قُوَّةٍ
after after strength
பின்பு/உறுதி பெறுதல்
ankāthan
أَنكَٰثًا
(into) untwisted strands
திரிகளாக
tattakhidhūna
تَتَّخِذُونَ
you take
ஆக்கிக்கொள்கிறீர்களா?
aymānakum
أَيْمَٰنَكُمْ
your oaths
உங்கள் சத்தியங்களை
dakhalan
دَخَلًۢا
(as) a deception
ஏமாற்றமாக, வஞ்சகமாக
baynakum
بَيْنَكُمْ
between you
உங்களுக்கிடையில்
an takūna
أَن تَكُونَ
because is
இருப்பதற்காக
ummatun
أُمَّةٌ
a community
ஒரு சமுதாயம்
hiya
هِىَ
[it]
அது
arbā
أَرْبَىٰ
more numerous
பலம்வாய்ந்தவர்களாக
min
مِنْ
than
விட
ummatin
أُمَّةٍۚ
(another) community
ஒரு சமுதாயத்தை
innamā yablūkumu
إِنَّمَا يَبْلُوكُمُ
Only Allah tests you
நிச்சயமாக சோதிக்கிறான்/ உங்களை
l-lahu
ٱللَّهُ
Allah tests you
அல்லாஹ்
bihi
بِهِۦۚ
by it
இதன் மூலம்
walayubayyinanna
وَلَيُبَيِّنَنَّ
And He will make clear
நிச்சயம் தெளிவுபடுத்துவான்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on) the Day (of) the Resurrection
மறுமை நாளில்
mā kuntum
مَا كُنتُمْ
what you used (to)
எதை/இருந்தீர்கள்
fīhi
فِيهِ
in it
அதில்
takhtalifūna
تَخْتَلِفُونَ
differ
தர்க்கிப்பீர்கள்

Transliteration:

Wa laa takoonoo kallatee naqadat ghazlahaa mim ba'di quwwatin ankaasaa; tattakhizoona aimaanakum dakhlalam bainakum an takoona ummatun hiya arbaa min ummah; innnamaa yablookumul laahu bih; wa la yubaiyinanna lakum yawmal Qiyaamati maa kuntum fee takhtalifoon (QS. an-Naḥl:92)

English Sahih International:

And do not be like she who untwisted her spun thread after it was strong [by] taking your oaths as [means of] deceit between you because one community is more plentiful [in number or wealth] than another community. Allah only tries you thereby. And He will surely make clear to you on the Day of Resurrection that over which you used to differ. (QS. An-Nahl, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! உறுதிப்படுத்திய சத்தியத்தை முறித்து) நீங்கள் ஒரு பெண்ணுக்கு ஒப்பாகிவிடவேண்டாம். அவள் மிகக் கஷ்டப்பட்டு நூற்ற நூலை, தானே தறித்து துண்டு துண்டாக்கி விடுகிறாள். அன்றி, ஒரு வகுப்பாரைவிட மற்றொரு வகுப்பார் பலம் வாய்ந்தவர்களாக ஆகவும் உங்கள் சத்தியத்தைக் காரணமாக்கிக் கொள்ளாதீர்கள். இவ்விஷயத்தில் (நீங்கள் சரியாக நடக்கின்றீர்களா இல்லையா? என்று) நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிக்கிறான். தவிர, நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவைகளையும் மறுமை நாளில் அவன் உங்களுக்குத் தெளிவாக விவரித்துக் காண்பிப்பான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௨)

Jan Trust Foundation

நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்; ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான். இன்னும் நீங்கள் எ(வ் விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, (அதனை) அவன் உங்களுக்கு கியாமநாளில் நிச்சயமாகத் தெளிவாக்குவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தான் நெய்த நூலை (அது) உறுதி பெற்ற பின்பு (பல) உதிரிகளாக பிரித்த வளைப் போன்று ஆகிவிடாதீர்கள். ஒரு சமுதாயத்தை விட (வேறு) ஒரு சமுதாயம் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதற்காக (பலவீனர்களுடன் நீங்கள் செய்த) உங்கள் சத்தியங்களை ஏமாற்றமாக, வஞ்சகமாக ஆக்கிக் கொள்கிறீர்களா?. நிச்சயமாக அல்லாஹ் உங்களை இதன் மூலம் சோதிக்கிறான். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றை மறுமை நாளில் (அவன்) உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்துவான்.