குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯௦
Qur'an Surah An-Nahl Verse 90
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ اِنَّ اللّٰهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَاۤئِ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَاۤءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ (النحل : ١٦)
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- yamuru
- يَأْمُرُ
- commands
- ஏவுகிறான்
- bil-ʿadli
- بِٱلْعَدْلِ
- justice
- நீதம் செலுத்துவதற்கு
- wal-iḥ'sāni
- وَٱلْإِحْسَٰنِ
- and the good
- இன்னும் நல்லறம் புரிதல்
- waītāi
- وَإِيتَآئِ
- and giving
- இன்னும் கொடுப்பதற்கு
- dhī l-qur'bā
- ذِى ٱلْقُرْبَىٰ
- (to) relatives (to) relatives
- உறவினர்களுக்கு
- wayanhā
- وَيَنْهَىٰ
- and forbids
- இன்னும் அவன் தடுக்கிறான்
- ʿani l-faḥshāi
- عَنِ ٱلْفَحْشَآءِ
- [from] the immorality
- மானக்கேடானவற்றை விட்டு
- wal-munkari
- وَٱلْمُنكَرِ
- and the bad
- இன்னும் பாவம்
- wal-baghyi
- وَٱلْبَغْىِۚ
- and the oppression
- இன்னும் அநியாயம்
- yaʿiẓukum
- يَعِظُكُمْ
- He admonishes you
- உங்களுக்கு உபதேசிக்கிறான்
- laʿallakum tadhakkarūna
- لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
- so that you may take heed
- நீங்கள் ஞானம் பெறுவதற்காக
Transliteration:
Innal laaha yaamaru bil 'adli wal ihsaani wa eetaaa'i zil qurbaa wa yanhaa 'anil fahshaaa'i wal munkari walbagh-i' ya'izukum la'allakum tazakkkaroon(QS. an-Naḥl:90)
English Sahih International:
Indeed, Allah orders justice and good conduct and giving [help] to relatives and forbids immorality and bad conduct and oppression. He admonishes you that perhaps you will be reminded. (QS. An-Nahl, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், அநியாயம், பாவம் ஆகியவைகளிலிருந்து (உங்களை) அவன் தடை செய்கிறான். (இவைகளை) நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறும் அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯௦)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டு அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் ஞானம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான்.