Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௯

Qur'an Surah An-Nahl Verse 9

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَعَلَى اللّٰهِ قَصْدُ السَّبِيْلِ وَمِنْهَا جَاۤىِٕرٌ ۗوَلَوْ شَاۤءَ لَهَدٰىكُمْ اَجْمَعِيْنَ ࣖ (النحل : ١٦)

waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
And upon Allah
அல்லாஹ்வின் பொறுப்பு
qaṣdu l-sabīli
قَصْدُ ٱلسَّبِيلِ
(is) the direction (of) the way
நேர்/வழி
wamin'hā
وَمِنْهَا
and among them
இன்னும் அவற்றில்
jāirun
جَآئِرٌۚ
(are) crooked
கோணலானது
walaw shāa
وَلَوْ شَآءَ
And if He willed
அவன் நாடினால்
lahadākum
لَهَدَىٰكُمْ
surely He would have guided you
நேர்வழி நடத்தி இருப்பான்/உங்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரையும்

Transliteration:

Wa 'alal laahi qasdus sabeeli wa minhaa jaaa'ir; wa law shaaa'a lahadaakum ajma'een (QS. an-Naḥl:9)

English Sahih International:

And upon Allah is the direction of the [right] way, and among them [i.e., the various paths] are those deviating. And if He willed, He could have guided you all. (QS. An-Nahl, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று) கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான். (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௯)

Jan Trust Foundation

இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நேர்வழி(யை தெளிவுபடுத்துவது) அல்லாஹ்வின் பொறுப்பாகும். வழிகளில் (சில) கோணலானதும் உள்ளது. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தி இருப்பான்.