குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௮௯
Qur'an Surah An-Nahl Verse 89
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَوْمَ نَبْعَثُ فِيْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا عَلَيْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيْدًا عَلٰى هٰٓؤُلَاۤءِۗ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتٰبَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ ࣖ (النحل : ١٦)
- wayawma
- وَيَوْمَ
- And the Day
- நாளில்
- nabʿathu
- نَبْعَثُ
- We will resurrect
- நாம் எழுப்புவோம்
- fī kulli
- فِى كُلِّ
- among every
- ஒவ்வொரு
- ummatin
- أُمَّةٍ
- nation
- சமுதாயம்
- shahīdan
- شَهِيدًا
- a witness
- ஒரு சாட்சியாளரை
- ʿalayhim
- عَلَيْهِم
- over them
- அவர்களுக்கு எதிராக
- min
- مِّنْ
- from
- இருந்தே
- anfusihim
- أَنفُسِهِمْۖ
- themselves
- அவர்களில்
- waji'nā
- وَجِئْنَا
- And We (will) bring
- இன்னும் வருவோம்
- bika
- بِكَ
- you
- உம்மைக் கொண்டு
- shahīdan
- شَهِيدًا
- (as) a witness
- சாட்சியாளராக
- ʿalā
- عَلَىٰ
- over
- எதிரான
- hāulāi
- هَٰٓؤُلَآءِۚ
- these
- இவர்களுக்கு
- wanazzalnā
- وَنَزَّلْنَا
- And We sent down
- இறக்கினோம்
- ʿalayka
- عَلَيْكَ
- to you
- உம்மீது
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Book
- வேதத்தை
- tib'yānan
- تِبْيَٰنًا
- (as) a clarification
- மிக தெளிவுபடுத்தக்கூடியதாக
- likulli shayin
- لِّكُلِّ شَىْءٍ
- of every thing
- எல்லாவற்றையும்
- wahudan
- وَهُدًى
- and a guidance
- இன்னும் நேர்வழிகாட்டியாக
- waraḥmatan
- وَرَحْمَةً
- and mercy
- இன்னும் அருளாக
- wabush'rā
- وَبُشْرَىٰ
- and glad tidings
- இன்னும் நற்செய்தியாக
- lil'mus'limīna
- لِلْمُسْلِمِينَ
- for the Muslims
- முஸ்லிம்களுக்கு
Transliteration:
Wa yawma nab'asu fee kulli ummmatin shaheedan 'alaihim min anfusihim wa ji'naa bika shaheedan 'alaa haaa'ulaaa'; wa nazzalnaa 'alaikal Kitaaba tibyaanal likulli shai'inw wa hudanw wa rahmatanw wa bushraa lilmuslimeen(QS. an-Naḥl:89)
English Sahih International:
And [mention] the Day when We will resurrect among every nation a witness over them from themselves [i.e., their prophet]. And We will bring you, [O Muhammad], as a witness over these [i.e., your nation]. And We have sent down to you the Book as clarification for all things and as guidance and mercy and good tidings for the Muslims. (QS. An-Nahl, Ayah ௮௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்களிலிருந்தே (அவர்களிடம் வந்த நபியை) சாட்சியாக நாம் அழைக்கும் நாளில், உங்களை (உங்கள் முன் இருக்கும்) இவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டு வருவோம். (நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தாம் உங்கள்மீது இறக்கி இருக்கின்றோம். இது நேரான வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் (எனக்கு) முற்றிலும் கட்டுப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இருக்கின்றது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௮௯)
Jan Trust Foundation
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளரை நாம் எழுப்பி, (நிராகரித்த) இவர்களுக்கு எதிரான சாட்சியாளராக உம்மைக் கொண்டு வரும் நாளில் (அந்த வேதனையை அடைவார்கள்). (நபியே!) எல்லாவற்றையும் மிக தெளிவுபடுத்தக்கூடியதாகவும் நேர்வழி காட்டியாகவும் (அதை ஏற்று செயல்படுகின்ற) முஸ்லிம்களுக்கு அருளாகவும் நற்செய்தியாகவும் இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம்.