Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௮௫

Qur'an Surah An-Nahl Verse 85

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا رَاَ الَّذِيْنَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنْظَرُوْنَ (النحل : ١٦)

wa-idhā raā
وَإِذَا رَءَا
And when (will) see
கண்டால்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
wronged
தீங்கிழைத்தனர்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
the punishment
வேதனையை
falā yukhaffafu
فَلَا يُخَفَّفُ
then not it will be lightened
இலகுவாக்கப்படாது
ʿanhum
عَنْهُمْ
for them
அவர்களை விட்டு
walā hum yunẓarūna
وَلَا هُمْ يُنظَرُونَ
and not they will be given respite
இன்னும் அவர்கள்அவகாசம் அளிக்கப் பட மாட்டார்கள்

Transliteration:

Wa izaa ra al lazeena zalamul 'azaaba falaa yukhaf fafu 'anhum wa laa hum yunzaroon (QS. an-Naḥl:85)

English Sahih International:

And when those who wronged see the punishment, it will not be lightened for them, nor will they be reprieved. (QS. An-Nahl, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

இவ்வக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்ட பிறகு (அவர்கள் என்ன புகல் கூறியபோதிலும்) அவர்களுக்கு (வேதனை) குறைக்கப்பட மாட்டாது. அன்றி, அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படவும் மாட்டாது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௮௫)

Jan Trust Foundation

அக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்கூடாகப்) பார்க்கும்போது, (தம் வேதனையைக் குறைக்குமாறு எவ்வளவு வேண்டினாலும்) அவர்களுக்கு (வேதனை) இலேசாக்கவும் பட மாட்டாது; அன்றியும் (அவ்வேதனை பெறுவதில்) அவர்கள் தாமதப் படுத்தபடவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தீங்கிழைத்தவர்கள் (மறுமையில்) வேதனையைக் கண்டால் (அதைக் குறைக்க காரணம் கூறுவார்கள். ஆனால்), அவர்களை விட்டு (வேதனை) இலகுவாக்கப்படாது. இன்னும் அவர்கள் (வேதனையை பிற்படுத்தி) அவகாசமும் அளிக்கப் படமாட்டார்கள்.