Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௮௨

Qur'an Surah An-Nahl Verse 82

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ (النحل : ١٦)

fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
Then if they turn away
அவர்கள் விலகினால்
fa-innamā ʿalayka
فَإِنَّمَا عَلَيْكَ
then only upon you
உம்மீது எல்லாம்
l-balāghu
ٱلْبَلَٰغُ
(is) the conveyance
எடுத்துரைப்பதுதான்
l-mubīnu
ٱلْمُبِينُ
the clear
தெளிவாக

Transliteration:

Fa in tawallaw fa innamaa 'alaikal balaaghul mubeen (QS. an-Naḥl:82)

English Sahih International:

But if they turn away, [O Muhammad] – then only upon you is [responsibility for] clear notification. (QS. An-Nahl, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

(இவ்வளவெல்லாம் இருந்தும் நபியே!) அவர்கள் (உங்களைப்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். ஏனென்றால் நம்முடைய) தூதை (அவர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் உங்கள்மீது கடமை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௮௨)

Jan Trust Foundation

எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகினால் (கவலைப்படாதீர்.) உம் மீது கடமை எல்லாம் தெளிவாக எடுத்துரைப்பதுதான்.