Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௮௦

Qur'an Surah An-Nahl Verse 80

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ جَعَلَ لَكُمْ مِّنْۢ بُيُوْتِكُمْ سَكَنًا وَّجَعَلَ لَكُمْ مِّنْ جُلُوْدِ الْاَنْعَامِ بُيُوْتًا تَسْتَخِفُّوْنَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ اِقَامَتِكُمْ ۙ وَمِنْ اَصْوَافِهَا وَاَوْبَارِهَا وَاَشْعَارِهَآ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰى حِيْنٍ (النحل : ١٦)

wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
jaʿala
جَعَلَ
(has) made
படைத்தான், அமைத்தான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
min buyūtikum
مِّنۢ بُيُوتِكُمْ
[from] your homes
உங்கள் வீடுகளில்
sakanan
سَكَنًا
a resting place
தங்குவதை
wajaʿala
وَجَعَلَ
and made
இன்னும் அமைத்தான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
min
مِّن
from
இருந்து
julūdi
جُلُودِ
the hides
தோல்கள்
l-anʿāmi
ٱلْأَنْعَٰمِ
(of) the cattle
கால்நடைகளின்
buyūtan
بُيُوتًا
tents
கூடாரங்களை
tastakhiffūnahā
تَسْتَخِفُّونَهَا
which you find light
எளிதாக்கிக் கொள்கிறீர்கள்/அவற்றை
yawma
يَوْمَ
(on) the day
நாள்
ẓaʿnikum
ظَعْنِكُمْ
(of) your travel
நீங்கள் பயணிப்பது
wayawma
وَيَوْمَ
and the day
இன்னும் நாள்
iqāmatikum
إِقَامَتِكُمْۙ
(of) your encampment;
நீங்கள் தங்குகின்ற
wamin aṣwāfihā
وَمِنْ أَصْوَافِهَا
and from their wool
இன்னும் கம்பளிகள்/அவற்றில்
wa-awbārihā
وَأَوْبَارِهَا
and their fur
இன்னும் உரோமங்கள்/அவற்றின்
wa-ashʿārihā
وَأَشْعَارِهَآ
and their hair
இன்னும் முடிகள்/அவற்றின்
athāthan
أَثَٰثًا
(is) furnishing
செல்வம், பொருள்
wamatāʿan
وَمَتَٰعًا
and a provision
இன்னும் சுகமானபயன்பாட்டை
ilā
إِلَىٰ
for
வரை
ḥīnin
حِينٍ
a time
ஒரு காலம்

Transliteration:

Wallaahu ja'ala lakum min juloodil an'aami buyootan tastakhif foonahaa yawma za'nikum wa yawma iqaamatikum wa min aswaafihaa wa awbaarihaa wa ash'aarihaaa asaasanw wa mataa'an ilaa been (QS. an-Naḥl:80)

English Sahih International:

And Allah has made for you from your homes a place of rest and made for you from the hides of the animals tents which you find light on your day of travel and your day of encampment; and from their wool, fur and hair is furnishing and enjoyment [i.e., provision] for a time. (QS. An-Nahl, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். கால்நடைகளின் தோல்களை நீங்கள் வீடுகளாக அமைக்க (வசதியான விதத்தில்) உங்களுக்காக அவன் படைத்தி ருக்கிறான். அது நீங்கள் பிரயாணம் போகும் சமயத்திலும், ஓர் இடத்தில் தங்கும் சமயத்திலும் எளிதில் சுமந்து செல்லக்கூடியதாக இருக்கிறது. (ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம் (வெள்ளாட்டின்) முடி ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கிறான். அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்கு பயன்படுகின்றன. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௮௦)

Jan Trust Foundation

அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பிரயாண நாட்களிலும் (ஊரில்) நீங்கள் தங்கும் நாட்களிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான். வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகையின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் உங்கள் வீடுகளில் உங்களுக்கு (வசதியான) தங்குதலை அமைத்தான்; கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்கு கூடாரங்களை அமைத்தான். அவற்றை நீங்கள் பயண நாளிலும், நீங்கள் தங்குகின்ற நாளிலும் எளிதாக்கிக் கொள்கிறீர்கள். அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளிகள், (ஒட்டகத்தின்) உரோமங்கள் (வெள்ளாட்டின்) முடிகள் ஆகியவற்றிலிருந்து (ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் (அவற்றின் வியாபாரத்தினால் அதிகமான செல்வத்தையும், மரணம் சமீபிக்கும்) ஒரு காலம் வரை ஒரு சுகமான பயன்பாட்டையும் உங்களுக்கு ஆக்கினான்.