Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭௯

Qur'an Surah An-Nahl Verse 79

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ مُسَخَّرٰتٍ فِيْ جَوِّ السَّمَاۤءِ ۗمَا يُمْسِكُهُنَّ اِلَّا اللّٰهُ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ (النحل : ١٦)

alam yaraw
أَلَمْ يَرَوْا۟
Do not they see
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā l-ṭayri
إِلَى ٱلطَّيْرِ
towards the birds
பறவைகளை
musakharātin
مُسَخَّرَٰتٍ
controlled
வசப்படுத்தப்பட்டவையாக
fī jawwi
فِى جَوِّ
in the midst
ஆகாயத்தில்
l-samāi
ٱلسَّمَآءِ
(of) the sky?
வானம்
mā yum'sikuhunna
مَا يُمْسِكُهُنَّ
None holds them up
தடுக்கவில்லை/அவற்றை
illā
إِلَّا
except
தவிர
l-lahu
ٱللَّهُۗ
Allah
அல்லாஹ்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
(are) Signs
(பல) அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
who believe
நம்பிக்கை கொள்கிறார்கள்

Transliteration:

Alam yaraw ilat tairi musakhkharaatin fee jawwis samaaa'i maa yumsikuhunna illal laah; inna fee zaalika la Aayaatil liqawminy yu'minoon (QS. an-Naḥl:79)

English Sahih International:

Do they not see the birds controlled in the atmosphere of the sky? None holds them up except Allah. Indeed in that are signs for a people who believe. (QS. An-Nahl, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

மேல் ஆகாயத்தில் (பறந்து) செல்லும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௭௯)

Jan Trust Foundation

வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வான ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டவையாக (மிதக்கும்) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை அல்லாஹ்வைத் தவிர எவரும் தடு(த்து நிறுத்தி இரு)க்கவில்லை. நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.