Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭௬

Qur'an Surah An-Nahl Verse 76

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلَيْنِ اَحَدُهُمَآ اَبْكَمُ لَا يَقْدِرُ عَلٰى شَيْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰى مَوْلٰىهُ ۗ اَيْنَمَا يُوَجِّهْهُّ لَا يَأْتِ بِخَيْرٍ ۖهَلْ يَسْتَوِيْ هُوَۙ وَمَنْ يَّأْمُرُ بِالْعَدْلِ وَهُوَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ࣖ (النحل : ١٦)

waḍaraba
وَضَرَبَ
And Allah sets forth
இன்னும் விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
And Allah sets forth
அல்லாஹ்
mathalan
مَثَلًا
an example
ஓர் உதாரணத்தை
rajulayni
رَّجُلَيْنِ
(of) two men
இரு ஆடவர்கள்
aḥaduhumā
أَحَدُهُمَآ
one of them
அவ்விருவரில் ஒருவர்
abkamu
أَبْكَمُ
(is) dumb
ஊமை
lā yaqdiru
لَا يَقْدِرُ
not he has power
சக்தி பெறமாட்டார்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
on anything
எதையும் (செய்ய)
wahuwa kallun
وَهُوَ كَلٌّ
while he (is) a burden
அவர் சுமையாக
ʿalā
عَلَىٰ
on
மீது
mawlāhu
مَوْلَىٰهُ
his master
தன் எஜமானர்
aynamā yuwajjihhu
أَيْنَمَا يُوَجِّههُّ
Wherever he directs him
அவர் எங்கு அனுப்பினாலும்/அவரை
lā yati bikhayrin
لَا يَأْتِ بِخَيْرٍۖ
not he comes with any good
நன்மையை செய்யமாட்டார்
hal yastawī
هَلْ يَسْتَوِى
Is equal
சமமாவார்(களா)?
huwa
هُوَ
he
இவரும்
waman
وَمَن
and (the one) who
இன்னும் எவர்
yamuru
يَأْمُرُ
commands
ஏவுகின்றார்
bil-ʿadli
بِٱلْعَدْلِۙ
[of] justice
நீதத்தைக் கொண்டு
wahuwa
وَهُوَ
and he
இன்னும் அவர்
ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
(is) on a path
வழியில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
straight?
நேரான(து)

Transliteration:

Wa darabal laahu masalar rajulaini ahaduhumaaa abkamu laa yaqdiru 'alaa shai'inw wa huwa kallun 'alaa mawlaahu ainamaa yuwajjihhu laa yaati bikhairin hal yastawee huwa wa many-yaamuru bil'adli wa huwa 'alaa Siraatim MMustaqeem (QS. an-Naḥl:76)

English Sahih International:

And Allah presents an example of two men, one of them dumb and unable to do a thing, while he is a burden to his guardian. Wherever he directs him, he brings no good. Is he equal to one who commands justice, while he is on a straight path? (QS. An-Nahl, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

பின்னும் இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாகக் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை;) ஏதும் செய்ய சக்தியற்றவன். அவன் தன் எஜமானனுக்குச் சுமையாகவும் இருக்கிறான். அவனை எதற்கு அனுப்பியபோதிலும் (தீங்கைத் தவிர) யாதொரு நன்மையும் கொண்டு வருவதில்லை. மற்றொருவனோ (அனைத்தையும் நன்கு அறிந்து) நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தையே ஏவிக்கொண்டும் இருக்கிறான். இத்தகையவனுக்கு (ஊமையாகிய) அவன் சமமாவானா? (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௭௬)

Jan Trust Foundation

மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்| அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான்: இரு ஆடவர்கள் அவ்விருவரில் ஒருவர் ஊமை. எதையும் செய்ய சக்தி பெறமாட்டார்; அவர் தன் எஜமானர் மீது சுமையாக இருக்கிறார். அவரை அவர் எங்கு (வேலைக்கு) அனுப்பினாலும் ஒரு நன்மையும் அவர் செய்யமாட்டார். இவரும், நேரான வழியில் தானும் இருந்துகொண்டு (மற்றவர்களையும்) நீதத்தைக் கொண்டு ஏவுகின்றவரும் சமமாவார்களா?