Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭௫

Qur'an Surah An-Nahl Verse 75

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَيْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًاۗ هَلْ يَسْتَوٗنَ ۚ اَلْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ (النحل : ١٦)

ḍaraba
ضَرَبَ
Allah sets forth
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah sets forth
அல்லாஹ்
mathalan
مَثَلًا
the example
ஓர் உதாரணத்தை
ʿabdan
عَبْدًا
(of) a slave
ஓர் அடிமை
mamlūkan
مَّمْلُوكًا
(who is) owned
சொந்தமானவர்
lā yaqdiru
لَّا يَقْدِرُ
not he has power
ஆற்றல் பெற மாட்டார்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
on anything
ஒன்றுக்கும்
waman
وَمَن
and (one) whom
இன்னும் ஒருவர்
razaqnāhu
رَّزَقْنَٰهُ
We provided him
வழங்கினோம்/ அவருக்கு
minnā
مِنَّا
from Us
நம் புறத்திலிருந்து
riz'qan
رِزْقًا
a provision
வாழ்வாதாரத்தை
ḥasanan
حَسَنًا
good
அழகியது
fahuwa
فَهُوَ
so he
ஆகவே அவர்
yunfiqu
يُنفِقُ
spends
தர்மம் புரிகிறார்
min'hu
مِنْهُ
from it
அதிலிருந்து
sirran
سِرًّا
secretly
இரகசியமாக
wajahran
وَجَهْرًاۖ
and publicly
இன்னும் வெளிப்படையாக
hal yastawūna
هَلْ يَسْتَوُۥنَۚ
Can they be equal?
சமமாவார்களா?
l-ḥamdu
ٱلْحَمْدُ
All praise
புகழ்
lillahi
لِلَّهِۚ
(is) for Allah!
அல்லாஹ்விற்கே
bal aktharuhum
بَلْ أَكْثَرُهُمْ
Nay but most of them
எனினும்/அதிகமானவர்(கள்)/அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Darabal laahu masalan 'abdam mammlookal laa yaqdiru 'alaa shai'inw wa marrazaqnaahu mminnaa rizqan hasanan fahuwa yunfiqu minhu sirranw wa jahra; hal yasta-woon; alhamdu lillaah; bal aksaruhum laa ya'lamoon (QS. an-Naḥl:75)

English Sahih International:

Allah presents an example: a slave [who is] owned and unable to do a thing and he to whom We have provided from Us good provision, so he spends from it secretly and publicly. Can they be equal? Praise to Allah! But most of them do not know. (QS. An-Nahl, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் யாதொரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்வதில்லை. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௭௫)

Jan Trust Foundation

அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்| பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். பிறருக்குச் சொந்தமான, ஒன்றையும் (செய்ய) ஆற்றல் பெறாத ஓர் அடிமை. இன்னும் ஒருவர் அவருக்கு நாம் நம் புறத்திலிருந்து அழகிய வாழ்வாதாரத்தை வழங்கினோம். ஆகவே அவர் அதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிகிறார். (இவ்விருவரும்) சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழ் அல்லாஹ்விற்கே. எனினும் அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.