Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௯

Qur'an Surah An-Nahl Verse 69

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ كُلِيْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِيْ سُبُلَ رَبِّكِ ذُلُلًاۗ يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ ۖفِيْهِ شِفَاۤءٌ لِّلنَّاسِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ (النحل : ١٦)

thumma
ثُمَّ
Then
பிறகு
kulī
كُلِى
eat
புசி
min
مِن
from
இருந்து
kulli
كُلِّ
all
ஒவ்வொரு
l-thamarāti
ٱلثَّمَرَٰتِ
the fruits
பூக்கள்
fa-us'lukī
فَٱسْلُكِى
and follow
இன்னும் செல்
subula
سُبُلَ
(the) ways
வழிகளில்
rabbiki
رَبِّكِ
(of) your Lord
உனது இறைவனின்
dhululan
ذُلُلًاۚ
made smooth"
சுலபமாக
yakhruju
يَخْرُجُ
Comes forth
வெளியேறுகிறது
min
مِنۢ
from
இருந்து
buṭūnihā
بُطُونِهَا
their bellies
அதன் வயிறுகள்
sharābun
شَرَابٌ
a drink
ஒரு பானம்
mukh'talifun
مُّخْتَلِفٌ
(of) varying
மாறுபட்டது
alwānuhu
أَلْوَٰنُهُۥ
colors
அதன் நிறங்கள்
fīhi
فِيهِ
in it
அதில்
shifāon
شِفَآءٌ
(is) a healing
நிவாரணம்
lilnnāsi
لِّلنَّاسِۗ
for the mankind
மக்களுக்கு
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில்
laāyatan
لَءَايَةً
(is) surely a Sign
ஓர் அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
who reflect
சிந்திக்கின்றார்கள்

Transliteration:

Summma kulee min kullis samaraati faslukee subula Rabbiki zululaa; yakhruju mim butoonihaa sharaabum mukh talifun alwaanuhoo feehi shifaaa'ul linnaas, innna fee zaalika la Aayatal liqawminy yatafakkaroon (QS. an-Naḥl:69)

English Sahih International:

Then eat from all the fruits and follow the ways of your Lord laid down [for you]." There emerges from their bellies a drink, varying in colors, in which there is healing for people. Indeed in that is a sign for a people who give thought. (QS. An-Nahl, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௯)

Jan Trust Foundation

“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு “ஒவ்வொரு பூக்களிலிருந்தும் புசி, உனது இறைவன் (உனக்கு அறிவித்த) சுலபமான வழிகளில் (உன் கூட்டை நோக்கிச்) செல்”(எனக் கட்டளையிட்டான்). இதனால் அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியேறுகிறது. அதில் மக்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.