குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௬
Qur'an Surah An-Nahl Verse 66
ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ لَكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةً ۚ نُسْقِيْكُمْ مِّمَّا فِيْ بُطُوْنِهٖ مِنْۢ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَاۤىِٕغًا لِّلشّٰرِبِيْنَ (النحل : ١٦)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- fī l-anʿāmi
- فِى ٱلْأَنْعَٰمِ
- in the cattle
- கால்நடைகளில்
- laʿib'ratan
- لَعِبْرَةًۖ
- (is) a lesson
- ஒரு படிப்பினை
- nus'qīkum
- نُّسْقِيكُم
- We give you to drink
- புகட்டுகிறோம்/உங்களுக்கு
- mimmā
- مِّمَّا
- from what
- எதிலிருந்து
- fī buṭūnihi
- فِى بُطُونِهِۦ
- (is) in their bellies
- அதன் வயிறுகளில்
- min bayni
- مِنۢ بَيْنِ
- from between
- இடையில்
- farthin
- فَرْثٍ
- bowels
- சானம்
- wadamin
- وَدَمٍ
- and blood
- இன்னும் இரத்தம்
- labanan
- لَّبَنًا
- milk
- பாலை
- khāliṣan
- خَالِصًا
- pure
- கலப்பற்றது
- sāighan
- سَآئِغًا
- palatable
- மதுரமானது, இலகுவாக இறங்கக்கூடியது
- lilshāribīna
- لِّلشَّٰرِبِينَ
- to the drinkers
- அருந்துபவர்களுக்கு
Transliteration:
Wa inna lakum fil an'aami la'ibrah; nusqeekum mimmmaa fee butoonihee mim baini farsinw wa damil labanann khaalisan saaa'ighallish shaaribeen(QS. an-Naḥl:66)
English Sahih International:
And indeed, for you in grazing livestock is a lesson. We give you drink from what is in their bellies – between excretion and blood – pure milk, palatable to drinkers. (QS. An-Nahl, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்து பவர்களுக்கு மிக்க இன்பகரமானது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௬)
Jan Trust Foundation
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் (அக்கால்நடைகளின்) வயிறுகளிலிருந்து கலப்பற்ற, அருந்துபவர்களுக்கு மதுரமான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.