Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௫

Qur'an Surah An-Nahl Verse 65

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ ࣖ (النحل : ١٦)

wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
anzala
أَنزَلَ
sends down
இறக்குகின்றான்
mina
مِنَ
from
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
the sky
மேகம்
māan
مَآءً
water
மழையை
fa-aḥyā
فَأَحْيَا
then gives life
இன்னும் உயிர்ப்பிக்கின்றான்
bihi
بِهِ
by it
அதன் மூலம்
l-arḍa
ٱلْأَرْضَ
(to) the earth
பூமியை
baʿda mawtihā
بَعْدَ مَوْتِهَآۚ
after its death
அது இறந்த பின்னர்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில்
laāyatan
لَءَايَةً
(is) surely a Sign
ஓர் அத்தாட்சி
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yasmaʿūna
يَسْمَعُونَ
who listen
செவி சாய்க்கின்றார்கள்

Transliteration:

Wallaahu anzala minas samaaa'i maaa'an fa ahyaa bihil arda ba'da mawtihaa; inna fee zaalika la aayatal liqaw miny yasma'oon (QS. an-Naḥl:65)

English Sahih International:

And Allah has sent down rain from the sky and given life thereby to the earth after its lifelessness. Indeed in that is a sign for a people who listen. (QS. An-Nahl, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௫)

Jan Trust Foundation

இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான் - நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் மேகத்திலிருந்து மழையை இறக்குகிறான்; அதன் மூலம் பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிக்கின்றான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.